- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு புறாவை தின்றதுக்கு போரா, பெரிய அக்கப் போராக இருக்கிறதே, இம்சை அரசன் புலிகேசி நிலைமையில்...

ஒரு புறாவை தின்றதுக்கு போரா, பெரிய அக்கப் போராக இருக்கிறதே, இம்சை அரசன் புலிகேசி நிலைமையில் தவிக்கும் நடிகர் சல்மான்கான் – தரமான சம்பவமா இருக்கே பாஸ்?

- Advertisement -

நடிகர் சல்மான்கான் பாலிவுட் ஸ்டார்களில் மிக முக்கியமானவர். மிக அழகிய இந்திய நடிகர்களின் சல்மான்கான் முக்கியமானவர். இன்னும் பல பெண்களின் கனவு நாயகன் அவர்தான். ஹப் ஆப்கே ஹை கோன் படம் மூலம் இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த மனங்களையும் கொள்ளையடித்த வசீகரமான நடிகர்.

ஆனால், சர்ச்சை நாயகனாகவும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவராக சல்மான்கான் இருக்கிறார். இவர் மானை வேட்டையாடிய சம்பவமும், அதைத்தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டது, சிறை தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்தது எல்லாமே ரசிகர்கள் ஏற்கனவே அறிந்த விஷயம்தான். இப்போது மீண்டும் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

- Advertisement -

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர் தரப்பில் இருந்து பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகர் ஜிப்பி கிரேவால், முகநூல் பக்கத்தில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. சல்மான்கானை உங்கள் சகோதரர் என நினைக்கிறீர்கள். உங்கள் சகோதரர் உங்களை பாதுகாக்கும் நேரம் வந்துவிட்டது. தாவூத் உங்களை காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்க வேண்டாம். இது சல்மான்கானுக்கும் சேர்த்துதான். உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

நீங்கள் இப்போது எங்கள் ரேடாரில் வந்துவிட்டீர்கள். இது ஒரு டிரெய்லர்தான். முழுபடமும் விரைவில் வெளியாகும். நீங்கள் விரும்பிய எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் தப்பிச் செல்லுங்கள். ஆனால் நினைவில் வைத்திருங்கள். மரணத்திற்கு எந்த விசாவும் தேவையில்லை. அது அழைக்கப்படாமல் வருகிறது, என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பஞ்சாபி பாடகர் ஜிப்பி கிரேவல் வீட்டில் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வான்கூவர் வீட்டில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்ட நிலையில், அதற்கு பிஷ்னாய் தரப்பு நாங்கள்தான் செய்தோம் என தெரிவித்துள்ளது. அதை தான் டிரெய்லர் என்றும் அடுத்து முழுபடமாக வெளிவரும் என்பதை கொலை மிரட்டலாகவும் தெரிவித்துள்ளது.

புல்வாய் இன மானை கொன்ற வழக்கில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பழங்குனி இனத்தைச் சேர்ந்த பிஷ்னாய் மக்கள், புல்வாய் இன மான்களை பகவான் ஜம்பேஸ்வரர் ஆக, தெய்வமாக வழிபடுகின்றனர். பிஷ்னாய் இனத்தைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய், தங்களது புனித தெய்வமாக கருதும் மானை கொன்றதால், சல்மான்கானை கொல்ல வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார். இதையடுத்து, சல்மான்கானின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்