- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்கிய படங்களில் எனக்கு பிடிக்காத படம் மெட்ராஸ்தான், ரசிகர்கள் கை தட்டியதை பார்த்து ...

நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடிக்காத படம் மெட்ராஸ்தான், ரசிகர்கள் கை தட்டியதை பார்த்து டென்சன் ஆயிட்டேன் – இயக்குனர் பா ரஞ்சித் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தினேஷ் நந்திதா கலையரசன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. காதல் காமெடி கலந்த இந்த படம் பா ரஞ்சித்துக்கு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது.

தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கிய படம் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். அவரது நண்பர் கேரக்டரில் கலையரசன் நடித்திருந்தார். கேத்தரின் தெரசா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், சுவரில் வரைந்த கட்சி தலைவரின் உருவப்படம் ஏற்படுத்தும் அரசியல் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

அதன்பிறகு பா ரஞ்சித் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த படத்தில் ரஜினி கபாலி என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை அடைந்ததால், அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்திலும் ரஜினி நடித்தார். இந்த படத்தை அவரது மருமகன் தனுஷ் தயாரித்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் தங்கலான். விக்ரம் மாளவிகா மோகனன் பார்வதி பசுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் திருப்திப்படுத்தவில்லை. வசூல் ரூ. 80 கோடி மட்டுமே வந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித், மெட்ராஸ் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு பிடிக்காத படம் மெட்ராஸ் தான். அந்த படத்தை நான் பார்க்கும் போது இடைவேளை நேரத்தில் ஆடியன்ஸ் எல்லாம் கை தட்டறாங்க. எனக்கு பயங்கரமா டென்சன் ஆயிடுச்சு.

காளி ஒரு இன்னோசென்ட் பையன். அவன் கொலை பண்ணும் போது எல்லோருக்கும் பதட்டம் வரணும். நான் அதை எதிர்பார்த்துதான் அப்படி ஒரு காட்சியை எடுத்தேன். ஆனால் அவன் கொலை செய்ததை எல்லோரும் கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் ஓபனாக கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்