கன்னட நடிகர் சுதீப் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழில் நான் ஈ புலி உள்ளிட்ட சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதிலும் நான் ஈ படத்தில் கதாநாயகி சமந்தா மீது ஆசைப்படும் தொழிலதிபர் கேரக்டரில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் சுதீப் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மேக்ஸ். இந்த படத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மேக்ஸ் படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் இந்த மாபெரும் வெற்றியை தந்த மேக்ஸ் படத்தில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது கன்னட நடிகர் சுதீப் இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவரான விதார்த் தான் ஹீரோ மேக்ஸ் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்ஸ் படத்தின் இயக்குனர் விஜய் கார்த்திகேயன் மேக்ஸ் படத்தின் கதையை உருவாக்கும் போதே, அந்த படத்தில் நடிகர் விதார்த்தை ஹீரோவாக வைத்து தான் அந்த கதையை எழுதி இருக்கிறார். ஆனால் மேக்ஸ் படத்தின் கதையை தயாரிப்பாளர் எஸ் தாணுவிடம் கூறியபோது, இதில் ஹீரோவாக விதார்த்தை நடிக்க வைக்கலாம் எனவும் இயக்குனர் கூறியிருக்கிறார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு, கன்னட நடிகர் சுதீப் கால்ஷீட் என்னிடம் இருக்கிறது. ஏற்கனவே அவரிடம் தேதி வாங்கியிருக்கிறேன். எனவே அவரை ஹீரோவாக வைத்து இந்த படத்தை எடுங்கள் என்று கூறிவிட்டார். அதனால் தான் இந்த படத்தில் சுதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இல்லை என்றால் இந்த படத்தில் ஹீரோவாக விதார்த் தான் நடித்திருப்பார்.
தயாரிப்பாளர் தாணு கூறிய காரணத்தால் தான் இந்த படத்தில் நடிகர் விதார்த் நடிக்கும் அருமையான வாய்ப்பை இழந்தார் என்று சமீபத்தில் ஒரு வீடியோவில் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ. பிஸ்மி கூறியிருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விதார்த் பல படங்களில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி யதார்த்தமான நடிகர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தயாரிப்பாளர் அந்த நல்ல வாய்ப்பை தடுத்து விட்டாரே என்று ஆதங்கப்படுகின்றனர்.





