- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படங்கள் தோற்றுப் போக நான் காரணமில்லை, நடிகர் ஜெயம் ரவி ஸ்டேட்மென்ட் - அப்போ...

என் படங்கள் தோற்றுப் போக நான் காரணமில்லை, நடிகர் ஜெயம் ரவி ஸ்டேட்மென்ட் – அப்போ ரசிகர்கள்தான் காரணமா ப்ரோ? என்ன சொல்றீங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. குறிப்பாக சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் ஜெயம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி வனமகன் தனி ஒருவன் பேராண்மை போகன் என அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. வசூல் ரீதியாக பலத்த நஷ்டத்தை சந்தித்தன. விமர்சன ரீதியாகவும் ஜெயம் ரவி தோல்வி நடிகர் என்று பலராலும் கூறப்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. அதற்கு பின் ஜெயம் ரவி நடித்த பல படங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தன. குறிப்பாக கடந்த தீபாவளிக்கு வெளியான பிரதர் படமும் எடுபடவில்லை. இந்த படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி பாஸ் என்கிற பாஸ்கரன் சிவா மனசுல சக்தி போன்ற ஹிட் படங்களை தந்த எம் ராஜேஷ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை, 14ம் தேதி ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை என்ற படம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது, கடந்த 2014ம் ஆண்டு எனக்கு சரியான ஆண்டாக அமையவில்லை. நான் நடித்த படங்களும் சரியாக போகவில்லை.

- Advertisement -

நான் ஏதாவது தவறு செய்திருக்கேனா, நான் தவறான கதைகளை தேர்வு செய்து விட்டேனா என யோசித்தேன். என் தரப்பில் இருந்து தவறு இல்லை அப்போது நான் ஏன் துவண்டு போக வேண்டும் என்று நினைத்தேன். அடுத்த ஆண்டிலேயே 2015ல் தனி ஒருவன் ரோமியோ ஜூலியட் பூலோகம் எனத் தொடந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்தேன்.

வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவர் தோல்வி அடைந்து கீழே விழுந்து விட்டால் அது தோல்வி ஆகிவிடாது. அவர் மீண்டும் எழுந்திருக்காமல் இருந்தால் தான் அது தோல்வி. இந்த ஆண்டு நான் மீண்டும் எழுந்து விடுவேன். அதற்கான நல்ல கதைகள் என்னிடம் இருக்கிறது. நல்ல திறமையான இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறேன் என்று ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்