- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன், அதை ஒரு முதியவர் தான் எனக்கு புரிய...

அந்த விஷயத்தில் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன், அதை ஒரு முதியவர் தான் எனக்கு புரிய வைத்தார் – நடிகர் சூர்யா ஓப்பன் டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. மூத்த நடிகர் சிவகுமாரின் மூத்த மகன்தான் சூர்யா. இவரது மனைவிதான் ஜோதிகா. இவரது தம்பி கார்த்தி இருவரும் திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நேருக்கு நேர் என்ற படம் மூலம் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்போது பள்ளி மாணவர் போல இருப்பதாக சூர்யாவை பலரும் விமர்சித்தனர். நடிக்க தெரியாமல் அவர் தடுமாறுவதும், நடனம் ஆட தெரியாமல் திணறுவதும் திரையில் அப்பட்டமாக தெரிந்த நிலையில், அப்பா சிவக்குமார் போல் சூர்யா சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவாரா என்று பலரும் நினைத்தனர். ஆனால் மௌனம் பேசியதே படத்தில் அமீர் இயக்கத்தில் நடித்த சூர்யா ஒரு சிறந்த நடிகராக தன்னை நிரூபித்தார். அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படம் மூலம் தன்னை ஒரு திறமையான ஹீரோவாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன் பிறகு சூர்யா நடித்த கஜினி காக்க காக்க ஏழாம் அறிவு அயன் சிங்கம் போன்ற பல படங்கள் அவரை முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் உயர்த்தியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சூர்யா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெற வரவில்லை. கடைசியாக ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு பெயர் சொல்லும் படங்களாக இருந்தன. சூர்யா கடைசியாக நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணி கொண்ட இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கங்குவார் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது, சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். அப்போது அங்கு ஒரு முதியவர் ஜெய் பீம் படத்திற்கான டிக்கெட் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று ஜெய்பீம் படம் திரையரங்கில் வெளியாகவில்லை. ஓடிடி தளத்தில் தான் வெளியாகி உள்ளது அதில் பாருங்கள் என்று கூறினேன்.

ஆனால் அந்த பெரியவரால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் ஜெய் பீம் படம் படத்தை ஓடிடியில் வெளியிட்டது மாபெரும் தவறு என்பதை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட ஜெய்பீம் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வேட்டையன் படத்தை இயக்குவதற்கு முன்பாக இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்