தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் காமெடி நடிகர்கள் அன்று முதல் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் காமெடி நடிகர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை இப்போதைக்கு காமெடிக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களை எல்லாம் திரையில் பார்த்தால் ரசிகர்களுக்கு சிரிப்பே வருவதில்லை. அதற்கு பேஸ்புக், முகநூலில் சிலர் செய்யும் காமெடி ரீல்ஸ் பார்த்தால் கூட பயங்கரமாக சிரிப்பு வருகிறது.
குறிப்பாக அந்த காலத்தில் நாகேஷ் சந்திரபாபு சுருளிராஜன் தேங்காய் சீனிவாசன் அமர்க்களமான காமெடி செய்தனர். பிறகு லூஸ் மோகன் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் சூரி சந்தானம் என காமெடி நடிகர்களின் கொடி தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் இப்போது காமெடி செய்ய தமிழ் சினிமாவில் ஆளில்லாத பஞ்சம் நிலவுகிறது.
அதனால் காதல் காமெடி கலந்த ஜானரில் ஜாலியான படங்களை தரும் இயக்குனர் சுந்தர் சி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இயக்குனராக, நடிகராக மட்டுமின்றி ஒரு ரசிகராகவும் தன்னுடைய படங்களை இயக்கும் சுந்தர் சி காமெடியை பிரதானமாக்கி படங்களை ஜெயிக்க வைக்கிறார்.
12 ஆண்டுகளுக்கு முன் உருவான படம் மதகஜ ராஜா, இத்தனை ஆண்டுகளாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த நிலையில் இப்போது திரைக்கு வந்திருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 12ம் தேதி வெளியான மதகஜ ராஜா படத்தில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி மனோபாலா மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு காமெடி காட்சிகள் நிறைந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பும் ஆதரவும் தந்து வருகின்றனர். முதல் நாளில் ரூ 3 கோடி 2வது நாளில் ரூ. 8 கோடி 3வது நாளில் ரூ. 15 கோடி என மதகஜ ராஜா படத்தின் வசூல் எகிறி வருகிறது. இந்த பொங்கலை பொறுத்த வரை சுந்தர் சிக்கு உண்மையான கொண்டாட்டம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.





