- Advertisement -
Homeபொழுதுபோக்குபொது இடத்தில் அதை செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது, நான் என்ன மரமா, கட்டிடமா?...

பொது இடத்தில் அதை செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது, நான் என்ன மரமா, கட்டிடமா? நடிகை சாய்பல்லவி அதிரடி கேள்வி!

- Advertisement -

மலையாளத்தில் பிரேமலு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. ஊட்டியை அடுத்துள்ள கோத்தகிரியை சேர்ந்த இவர், டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமலு படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே சாய்பல்லவிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தமிழில் மாரி 2 என்ஜிகே ஜூலை 15 பாவ கதைகள் கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு கடந்தாண்டில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில், இந்து வர்கீஸ் ரெபேகா என்ற கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் சாய்பல்லவி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி கூறியதாவது, ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் இருப்பது சகஜம்தான். சில பயங்கள் கூட நம்மை எப்போதும் பின்தொடரும். நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சிலர் திடீரென்று என்னை போன்களில் படம் எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அது எனக்கு பிடிக்காது. நான் மரமோ அல்லது விலைமதிக்க முடியாத கட்டிடமோ இல்லை. உயிருள்ள மனுஷி அல்லவா என்று கேட்கத் தோன்றும். உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு புகைப்படம் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

என்னை சுற்றி அதிக கூட்டம் இருந்தால், எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் பயமாகவும் கூச்சமாகவும் இருக்கும். என்னை பாராட்டினாலும் அப்படித்தான் எனக்கு இருக்கும். உடனே எனக்குள் 1 2 3 என்று கணக்கு சொல்ல ஆரம்பிப்பேன். ஏதாவது அளவுக்கு மீறி யோசிக்கவும் செய்வேன்.

இந்த பழக்கத்தை விட்டுவிட தினமும் தியானம் செய்கிறேன். நான் மிகக் குறைந்த அளவு மேக்கப் போட்டுக் கொண்டு சம்பிரதாய முறைப்படி இருக்கவும் ஆசைப்படுகிறேன் என்று நடிகை சாய்பல்லவி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமாரும், செல்பி யாராவது எடுத்தால் செல்போனை தட்டி விடுவார். அதே பாலிசிதான் சாய்பல்லவிக்கும் இருக்கும் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

சற்று முன்