- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருது… அறிவித்த மத்திய அரசு - இந்த விருது என்னுடையது...

நடிகர் அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருது… அறிவித்த மத்திய அரசு – இந்த விருது என்னுடையது மட்டுமல்ல – பெருந்தன்மையை வெளிப்படுத்திய ஏகே!

- Advertisement -

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. நமது நாட்டில் கலை அறிவியல் சமூகப்பணி பொதுப்பணி வர்த்தகம் மருத்துவம் இலக்கியம் விளையாட்டு கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதாக பத்ம விபூஷன், பத்மபூஷன் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகளை மத்திய அரசால் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று மாலை வெளியிட்டது. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் அஜீத் த்குமார், நடிகை சோபனா ஆகியோருக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜீத் குமார் இப்போது 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதியும் குட்பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதியும் வெளியாக உள்ளது.

சினிமாவின் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். இப்போது துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் அணித் தலைவராக பங்கேற்றுள்ளார். இந்த சூழலில் கலைத்துறையில் அவரது திறமையை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அஜீத்குமார் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இது என்னுடைய விருது மட்டுமல்ல, இதில் பலரின் உழைப்பு உள்ளது. நான் இந்த இடத்தில் மறைந்த என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் அம்மா என் மீது வைத்திருக்கும் அன்புக்கும், அவர் செய்த தியாகங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்படுகிறேன்.

கடந்த 25 ஆண்டுகளுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவியும் தோழியுமான ஷாலினிதான் என் பக்க பலம். என் குழந்தைகள் தான் என்னுடைய பெருமை. மேலும் இவை அனைத்துக்கும் என்னுடன் நின்ற என் அன்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்