- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுக்கும், சிவகார்த்திகேயன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? 2 டைட்டில்களை வெளியிட்டு ரசிகர்களை குழப்பிய நடிகர் விஜய்...

இதுக்கும், சிவகார்த்திகேயன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? 2 டைட்டில்களை வெளியிட்டு ரசிகர்களை குழப்பிய நடிகர் விஜய் ஆண்டனி!

- Advertisement -

அமரன் படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று மாலை அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தி திணிப்பை எதிர்க்கும் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் அதர்வா ரவி மோகன் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. வேட்டைக்காரன் நான் அவன் இல்லை போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார். சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டு வரும் மதகஜ ராஜா படத்தின் இசையமைப்பாரும் விஜய் ஆண்டனிதான். 12 ஆண்டுகளுக்கு முன் அந்த படத்துக்கு இசையமைத்தது அவர்தான்.

அதன் பிறகு நான் என்ற படம் மூலம் நடிகராக விஜய் ஆண்டனி மாறினார். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சலீம் கொலைகாரன் சைத்தான் எமன் அண்ணாதுரை காளி கொலை ரத்தம் என அவர் நடித்த பல படங்களில் பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன் படங்கள் அவரது நடிப்பில் மிகச் சிறந்த படங்களாக அமைந்தது. கடந்தாண்டில் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ மழை பிடிக்காத மனிதன் ஹிட்லர் என 3 படங்கள் ரிலீஸ் ஆனது. அவர் நடித்த ககன மார்கன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு டைரக்சனில் ஒரு படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இது அவரது 25வது படமாகும். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருன் படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. துப்பாக்கியுடன் விஜய் ஆண்டனி உட்கார்ந்திருப்பது போல் உள்ள இந்த போஸ்டரில் தமிழில் சக்தி திருமகன் என்றும் ஆங்கிலத்தில் பராசக்தி என்றும் படத்துக்கு டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விஜய் ஆண்டனி, புயல் அடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா, இவன் நடக்கிற வேகத்தில் சகுனி கூட்டம் தாங்குமா… என்ற வரிகளுடன் ஒரு பதிவையும் செய்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 25வது படத்திற்கும் பராசக்தி என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் ஆண்டனியும் தனது படத்துக்கு பராசக்தி என்றும் சக்தி திருமகன் என்றும் இரண்டு டைட்டில்களை அறிவித்துள்ளார். இந்த படத்துக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் ஏன் விஜய் ஆண்டனி இப்படி ஒரு பதிவை செய்துள்ளார் என்று ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் உள்ளனர்.

சற்று முன்