- Advertisement -
Homeபொழுதுபோக்குஒன்லி ஒன், சூப்பர் ஒன் என்பதை நிரூபித்த ரஜினிகாந்த், ரிலீஸிற்கு முன்பே வசூலில் மாஸ் காட்டி...

ஒன்லி ஒன், சூப்பர் ஒன் என்பதை நிரூபித்த ரஜினிகாந்த், ரிலீஸிற்கு முன்பே வசூலில் மாஸ் காட்டி வரும் ஜெயிலர்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை என்பது சமீப நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்த சர்ச்சையில் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் செய்த ஒரு தரமான சம்பவம், அவர்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லியிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளிவருகிறது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

- Advertisement -

படம் வெளியாக இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் உள்ளதால் இன்னும் அதிகளவு வசூலாக வாய்ப்புகள் இருப்பதாவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உதாரணங்களாக கூறலாம். அந்தளவுக்கு தனது கரிஷ்மாவால் மக்களை கவர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த். இதன் ஒரு பகுதியாக தற்போது “ஜெயிலர்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் ஒரு கோடி வசூல் ஆகியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

“ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை. ஆதலால் “ஜெயிலர்” திரைப்படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்