லிட்டில் சூப்பர் ஸ்டாராக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிலம்பரசன். இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். 40 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் அவர் நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சிம்புவை பொருத்த வரை அவரது அப்பா போலவே நடிப்பில் இசையில் நடனத்தில் இயக்கத்தில் என சகல கலைகளும் கற்ற ஒரு சிறந்த திரைக்கலைஞனாக இருக்கிறார். பல பாடல்களை தனது சொந்தக் குரலில் பாடி இருக்கிறார். பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து வருகிறார்.
மேலும் நாளை மறுதினம் பிப்ரவரி 3ம் தேதி, நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் நடிக்க உள்ள 3 படங்களின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் அஸ்வத் மாரிமுத்து தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குனர்களின் படங்களில் சிம்பு அடுத்து நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தொகுப்பாளர் மற்றும் நடிகை டிடி சிம்புவை நேர்காணல் செய்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் டிடி சிம்புவிடம் நீங்க நல்லவரா, கெட்டவரா சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த நடிகர் சிம்பு கூறியதாவது, நான் நல்லவனா கெட்டவனா என்பதற்கு பதில் சொல்வதற்கு முன்னாடி நல்லது எது கெட்டது எதுங்கறது பத்தி எனக்கு லிஸ்ட் வேணும்.
நல்லதுன்னா எது கெட்டதுன்னா எதுன்னு எனக்கு தெரியலே. யாருக்குமே தெரியாது, என்னை மட்டும் ஏன் கேட்கறீங்க. கொலை பண்றது தப்புதான் அது தெரியும். ஆனால ஒரு குழந்தையை ஒருத்தன் கழுத்தை அறுத்து கொலை பண்ண போறான். அவன்கிட்ட இருந்து அந்த குழந்தையை காப்பாத்த நான் அவனை குத்தி கொலை செஞ்சா அது தப்பா. ஒருத்தன் நல்லவனா கெட்டவனா நடந்துக்கிறதை அந்த சூழ்நிலைகள்தான் தீர்மானிக்குது.
ஒருத்தன் பசியில் இருக்கிறான்னா அப்போ கடவுள் மாதிரி அவனுக்கு உதவி பண்ணனும். சாப்பாடு கொடுக்கணும். ஒரு பெண்ணை கெடுக்க வர்றான், ஒரு குழந்தையை கொல்ல வர்றான் அப்படீன்னா அந்த நேரத்தில் அவங்களை காப்பாத்த அவனை அடிச்சு காலி பண்ணனும். அதுதான் பண்ணியாகணும், வேற வழி இல்லே என்று சிம்பு அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





