- Advertisement -
Homeபொழுதுபோக்குகராத்தே பாபு திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல இயக்குனரின் மகன்... போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு...

கராத்தே பாபு திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல இயக்குனரின் மகன்… போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு…

- Advertisement -

ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அண்மையில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படமும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற சூழலில், வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக ஜெயம் ரவி என்னும் தனது பெயரை ரவி மோகன் என்று அவர் மாற்றினார்.

இந்த நிலையில் தற்போது அவர், பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேறு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை அவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார், சுதா கொங்கரா.

- Advertisement -

இந்தத் திரைப்படம் தொடர்பான அறிமுக வீடியோவில், ரவி மோகனின் கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் கையில் துப்பாக்கியுடன் சிவகார்த்திகேயன் உருவத்தை அவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 1965 ஆம் காலகட்டங்களில் நடைபெறுவது போல இதன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுபோக ரவி மோகன் அடுத்ததாக ஜீனியில் நடித்திருக்கிறார். மிஷ்கின் உதவியாளர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி இருக்க, ரவி மோகனின் அடுத்த திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருப்பது கராத்தே பாபு தான். காரணம் இதன் அறிவிப்பு டீசரே பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கிறார் ரவி மோகன். எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக வரும் அவர் சட்டப்பேரவையில் முதல்வருக்கு எதிராக பேசுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு என இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். டாடா திரைப்படத்தை எடுத்த, கணேஷ் கே பாபு தான் இதனை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கராத்தே பாபு திரைப்படத்தில், இயக்குனர் பி வாசுவின் மகன் ஷக்தி வாசுதேவன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாக்ஸர் செல்வராஜ் எனும் கதாபாத்திரத்தை இயக்குனர் அளித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டரும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்