- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதற்குள்ளேயும் அத்தனை கோடி ரூபாயை நெருங்கி விட்டதா டிராகன் திரைப்படம்... அடேங்கப்பா இது பெரிய ஹீரோக்களுக்கே...

அதற்குள்ளேயும் அத்தனை கோடி ரூபாயை நெருங்கி விட்டதா டிராகன் திரைப்படம்… அடேங்கப்பா இது பெரிய ஹீரோக்களுக்கே நடக்காத விஷயம் ஆச்சே… பட்டையை கிளப்பும் பிரதீப் ரங்கநாதன்…

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கே எஸ் ரவிக்குமார், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதன் ட்ரெய்லர் வெளியாகும் போது பலரும் டிராகன் திரைப்படத்தை கழுவி ஊற்றினார்கள். இளைய சமுதாயத்தை கெடுக்கவே இது போன்ற திரைப்படத்தை இயக்குனர் உருவாக்குகிறார் என்று பலரும் அவரை சாடினார்கள். அதுபோக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் போலவே இது அமைந்திருப்பதாகவும் கலாய்த்தார்கள்.

ஆனால் அப்போதே இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து தெளிவாக கூறியிருந்தார். இது நிச்சயமாக டான் திரைப்படத்தின் தழுவல் இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட திரைப்படத்தை வைத்து எப்படி ஒரு கதை எழுதுவோம் என்றும் அவர் கேட்டிருந்தார். படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

இயக்குனரின் அந்த உறுதியான பேச்சுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது திரைப்படம். இப்போது படம் பார்த்த பலரும், நேர் மாறாக டான் திரைப்படத்தை தான் கழுவி ஊற்றி வருகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க, டிராகன் திரைப்படத்தின் வெற்றி என்பதும் மிகப்பெரிய வகையில் அமைந்து விட்டது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.

பொதுவாக ஒரு திரைப்படத்தில் வரும் ஹீரோ குறுக்கு வழியில் சென்றாலும் நேர்மையற்ற முறையில் சம்பாதித்தாலும் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் சொகுசு வாழ்க்கையில் வாழ்வது போன்று தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் தியரியை தான் சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.

குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக வந்திருப்பதால் டிராகன் திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் வசூல் சக்கை போடு போட்டு வருகிறது. இன்று மூன்றாவது நாளிலும், இந்த திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலை இப்போதே அந்த திரைப்படம் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்