- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு விஜயை இதுவரை பார்த்ததே இல்லே, படம் பார்த்த ரசிகர்கள் சொல்றது உண்மைதானா, பொதுவான...

இப்படி ஒரு விஜயை இதுவரை பார்த்ததே இல்லே, படம் பார்த்த ரசிகர்கள் சொல்றது உண்மைதானா, பொதுவான விமர்சனம் அப்படி இல்லையே?

- Advertisement -

தமிழ்நாட்டில், லியோ படத்துக்கு தொடர்ந்து வரவேற்பான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக லியோதாஸ் என்ற விஜய் கேரக்டரை ரசிகர்கள் மிகவும் சிலாகித்து பேசி வருகின்றனர். லியோவில் எல்சியு இருப்பதும், அடுத்த படத்தில் அது தொடரும் என்பதையும் படம் பார்த்த ரசிகர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

கார்த்தி, கமல் ஆகியோருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது போல விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் ஆக மாறியுள்ளது. கேரளாவை ஒட்டிக் காணப்படும் நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர், அங்குள்ள தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காததால், ஆரியங்காவு வழியாக கேரளாவில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற தகவலும் கிடைத்துள்ளது.

அதேவேளையில் தமிழ் நடிகர் விஜய் நடித்த படம், தமிழில் இயக்குநர் இயக்கிய படம் என்ற நிலையில், தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க முடியவில்லை. ஆனால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அங்குள்ள ரசிகர்கள் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டனர். இது எங்களுக்கு பலத்த ஏமாற்றம் என, விஜய் ரசிகர்கள் பலரும் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

விஜய் திரையிடப்படும் தியேட்டர்களின் முன் நெரிசலை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்தினால் அதற்கு ரூ. 500 வரை அபராதம் விதித்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு தியேட்டர்களின் முன் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

லியோ படத்தை பொருத்தவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், பத்திரிகையாளர்கள், சினிமா விமர்சகர்கள் பார்வையில் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றே தெரிகிறது. அதே போல், படம் பார்த்த ஒரு சில ரசிகர்கள், படம் பாதி வரை நல்லா இருக்குது, செகண்ட் ஆப் ரொம்ப ஸ்லோவாக போகிறது என்ற கருத்தையும் முன்வைக்க துவங்கி இருக்கின்றனர்.

ஆனால், வழக்கம்போல இந்த படத்திலும் மல்ட்டி ஸ்டார் பார்மூலா, லியோ படத்திலும் வேலை செய்திருக்கிறது. அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் இருப்பதும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது. எனினும் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்கும் பொதுவான சினிமா ரசிகர்களே லியோ பற்றிய சரியான விமர்சனத்தை சொல்ல முடியும்.

சற்று முன்