- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடக்கடவுளே தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெறும் இத்தனை கோடி ரூபாய்தான்...

அடக்கடவுளே தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெறும் இத்தனை கோடி ரூபாய்தான் வசூல் செய்து இருக்கிறதா… நடிகருக்கு இனி இயக்கம் அவசியம்தானா?!…

- Advertisement -

பா பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்கத்தின் பக்கம் தனது கவனத்தை செலுத்தியவர் தனுஷ். ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பலரது மனதிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் முதியோர் வயதில், தனது இளமைக்காலத்தில் சிந்தித்துப் பார்க்கும் காதல் அனுபவங்களை இந்தத் திரைப்படம் கூறியது தான். இதன் பிறகு இயக்கத்தின் பக்கம் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். இப்படியான சூழலில் தான் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கி கொடுக்க முடிவு செய்தார்.

- Advertisement -

அப்படியாக வெளிவந்த ராயன் திரைப்படமும் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. இருப்பினும் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட, ராயன் திரைப்படத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது. இதன் காரணமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டியது.

தற்போது இயக்கம் நடிப்பு என இரண்டு பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அவரது இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகிறது. அருண் விஜய் நித்யா மேனன் ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். ஒரு பக்கம் ஹோட்டல் சார்ந்தும், மறுபக்கம் குத்துச்சண்டை சார்ந்தும் இதன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

- Advertisement -

இதில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு உதவியாளராக தனுஷ் வருவது போல் தெரிகிறது. படம் எந்த காலகட்டத்தில் நடைபெறுகிறது என்பதும் சரியாக தெரியவில்லை. இப்படியான சூழலில் தனுஷின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

தனுஷின் சகோதரி மகன் பவன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. போதாக்குறைக்கு இதனுடன் வெளியான டிராகன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை பார்க்க பலருக்கும் ஆர்வம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் படம் வெளியான மூன்று நாட்களில் வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டும் தான் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புலம்பி தீர்க்கும் தனுஷ் ரசிகர்கள், தலைவரே இனி நமக்கு இயக்கம் வேண்டுமா என்பதை சற்று யோசித்துப் பார்க்கலாம் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்