- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் போட்ட கண்டிஷன் - மிக விரைவில் மீண்டும்...

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் போட்ட கண்டிஷன் – மிக விரைவில் மீண்டும் இணைய டிராகன் கூட்டணிக்கு இப்படி ஒரு சிக்கலா?

- Advertisement -

கடந்த 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் வெளியானது. காதலர் தினத்தன்று கடந்த 14ம் தேதி ரிலீஸாக வேண்டிய இந்த படம் அஜீத்குமாரின் விடாமுயற்சி படம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வெளியானது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வருவோம் என்பதை டிராகன் படம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. 3 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து இந்த படம் வெற்றி நடை போடுகிறது.

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹயாடு லோகர் அனுபமா பரமேஸ்வரன் இவானா இந்துமதி கௌதம் மேனன் மிஷ்கின் ஜார்ஜ் மரியன் உளளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கல்லூரி மாணவனாக டிராகன் பட கதைக்களத்தில் பிரதீப் ரங்கநாதன் புகுந்து விளையாடி இருக்கிறார். படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

டிராகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டிராகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெளிநாடுகளிலும் டிராகன் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சிலம்பரசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, மீண்டும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எனது இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடிப்பார். இந்த கூட்டணியில் மீண்டும் மிக விரைவில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அதிரடியாக அறிவித்தார்.

எப்போதுமே ஒரு தயாரிப்பு நிறுவனம், இயக்குனர், நடிகர் கூட்டணியில் ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்றால் அந்த வெற்றி கூட்டணி அடுத்த படத்தை உடனடியாக துவங்குவது வழக்கம். மதகஜ ராஜா படத்தின் வெற்றி தொடர்ந்து சுந்தர் சி விஷால் கூட்டணி அடுத்த படத்தை உடனே துவங்கியதை போல, டிராகன் பட வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறது.

ஆனால் அதில் ஒரு சிக்கல் தற்போது உருவாகி உள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில்தான் தனது முதல் படம் கோமாளி படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டில் அந்த படம் வெளியானது. வேல்ஸ் நிறுவனம் அப்போதே மேலும் ஒரு படத்தை பிரதீப் இயக்க ஒப்பந்தம் போட்டது. இதுவரை அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை. அதனால் டிராகன் படத்துக்கு பிறகு எங்களது வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை நீங்கள் இயக்கி நடியுங்கள், அல்லது எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குங்கள். அதற்கு பின்பே மற்ற படங்களில் நீங்கள் நடிக்க செல்லுங்கள் என்று கண்டிஷன் போட்டுள்ளது.

சற்று முன்