- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் முக்கிய காட்சியில் நடிக்கும் முன்னணி இயக்குனர்கள் - போட்றா வெடிய… சம்பவம் தரமா...

ஜனநாயகன் படத்தில் முக்கிய காட்சியில் நடிக்கும் முன்னணி இயக்குனர்கள் – போட்றா வெடிய… சம்பவம் தரமா இருக்குதே தளபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்னும் 3 பாடல் காட்சிகள், 2 சண்டை காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் மொத்தம் 5 பாடல் காட்சிகள் இருக்கின்றன. நடிகர் விஜயை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் சினிமா துறையிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் நடிகர்களாக, இயக்குனர்களாக இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

நடிகர் விஜய் நடிக்கும் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இயக்குனர்கள், விஜய் நடிக்கும் ஒரு படத்தையாவது தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், இப்போது நடித்துவரும் ஜனநாயகன் படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார்.

சினிமாவை விட்டு முழுமையாக விலகும் அவர் தமிழ்நாட்டு அரசியலில் முழு அளவில் தீவிரம் கவனம் செலுத்த இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆவதே தனது லட்சியம் என்று சூளுரைத்து வருகிறார்.

- Advertisement -

இப்போது ஜனநாயகன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முன்னணி இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார், அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் ஒரு காட்சியில் விஜயுடன் இணைந்து நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர், லியோ ஆகிய 2 படங்களில் விஜய் நடித்திருக்கிறார். அதேபோல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதே போல் அட்லி இயக்கத்தில் மெர்சல் தெறி பிகில் ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தனது தீவிர ரசிகர்களாக உள்ள இந்த இயக்குனர்களுக்கு தனது கடைசி படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் தந்திருக்கிறார். அதன்படி ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் பிரஸ்மீட் வைப்பது போலவும், அந்த காட்சியில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் அட்லி மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் நிருபர்களாக இருந்து, நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்பது போலவும் ஜனநாயகன் படத்தில் காட்சி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்