- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 37 கோடி பட்ஜெட்டில் தயாரான டிராகன் படம்… 3 வாரங்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா?...

ரூ. 37 கோடி பட்ஜெட்டில் தயாரான டிராகன் படம்… 3 வாரங்களில் வசூலித்தது இத்தனை கோடிகளா? – யப்பா… இது வேற லெவல் ப்ரோ!

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து டைரக்ட் செய்த படம் லவ் டுடே. இந்த படம் ரூ. 100 கோடி வசூலை கடந்த பிளாக்பஸ்டர் படமாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், இளம் காதலர்கள் தங்களது மொபைல் போன்களை ஒரு நாள் மாற்றிக்கொண்டால் அதனால் என்னென்ன பிரச்னைகள், பின்விளைவுகள் ஏற்படும் என்பதை காமெடி சென்டிமென்ட் கலந்து பிரதீப் ரங்கநாதன் கூறியிருந்தார்.

லவ் டுடே படத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 2வது படம்தான் டிராகன். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ. 37 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் இந்துமதி கௌதம் மேனன் மிஷ்கின் கேஎஸ் ரவிக்குமார் ஜார்ஜ் மரியன் விஜே சித்து உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியான இந்த படம் முதல் 3 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை தொட்டது.

ரசிகர்களின் மத்தியில் டிராகன் படத்துக்கு கிடைத்த அபார வரவேற்பால் தொடர்ந்து தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக நீடித்த நிலையில் 9 நாட்களில் டிராகன் படம் வசூல் 100 கோடி ரூபாயை கடந்தது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி வசூல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரூ. 8 கோடியாக இருந்து வருவதாக கூறப்பட்டது.

தற்போது டிராகன் படம் வெளியாகி சரியாக 3 வாரங்கள் ஆன நிலையில் இதுவரை உலகம் முழுவதும் டிராகன் படத்தின் வசூல் ரூ. 148 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ரூ. 150 கோடி வசூலை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 37 கோடியில் உருவான டிராகன் படம் இப்படி ரூ. 150 கோடி வசூலை எட்டும் அளவுக்கு அசுரத்தனமான வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்