- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் பட இயக்குனரை வளைத்து போட்ட நடிகர் சிவகார்த்திகேயன், அங்கும் பேச்சுவார்த்தையும் நடத்தி விட்டாரா? -...

கமல் பட இயக்குனரை வளைத்து போட்ட நடிகர் சிவகார்த்திகேயன், அங்கும் பேச்சுவார்த்தையும் நடத்தி விட்டாரா? – இது வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆரம்பத்தில் இருந்தவர் சிவகார்த்திகேயன். பிறகு நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து சில சினிமா விருதுகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அவவப்போது இயக்குனர்கள் நடிகர் நடிகைகளையும் நேர்காணல் செய்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்து வைத்தார். ஓவியா நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு மனம் கொத்திப் பறவை எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அதன்பிறகு அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ காக்கிச்சட்டை வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தந்தன. டாக்டர் மாவீரன் அயலான் படங்களை தொடர்ந்து கடந்தாண்டில் வெளியான அமரன் படம் அவரை முன்னணி நடிகராக மாற்றிவிட்டது.

இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற அவரது படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் சகோதரர்களை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் சகோதரர்கள் அடுத்து டைரக்ட் செய்ய உள்ளனர். நிச்சயமாக அது மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்பதால், இப்போதே அவர்களை சந்தித்து பேசி அடுத்து நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியதற்கு அவர்களுக்கு ஓகே சொல்லி இருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்த வரை ஆரம்பத்தில் இருந்தே தனது சினிமா பயணத்தை அவர் வெகு ஜாக்கிரதையாக திட்டமிட்டே நகர்த்தி வருகிறார். குறிப்பாக டைரக்டர்கள் கதாநாயகிகள் மற்றும் கதைகள் தேர்வில் அதிக உஷாராக இருக்கிறார். சுதா கொங்கரா ஏஆர் முருகதாஸ் ஆகியோருக்கு பின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் சகோதரர்கள் இயக்கும் படத்தில் நடித்தால், இன்னும் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக மாறலாம் என்று அவர் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்