கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தை இயக்குனர் சுகுமாரன் டைரக்ட் செய்திருந்தார். அல்லு அர்ஜூன் நாயகனாகவும் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்த இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார். டிஎஸ்பி என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.
செம்மரக் கடத்தல் சம்பவங்களை மையப்படுத்திய இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் மலையாளம் இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. இதில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டு அதிரடி கிளப்பியிருந்தார்.
அதன்பிறகு புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. பிளாக் பஸ்டர் மூவியாக அதிரடி காட்டிய இந்த படமும் ரூ. 1800 கோடி வரை வசூலை குவித்தது. அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா சுனில் பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படமும் மாஸ் காட்டியது. இதில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
புஷ்பா புஷ்பா 2 படங்களில் அபார வெற்றிக்கு பிறகு புஷ்பா 3 படமும் உருவாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அல்லு அர்ஜூன் சில படங்களில் நடித்த பிறகு சில ஆண்டுகள் கழித்துதான் இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்க திட்டமிட்டுள்ளனர். ஆக, புஷ்பா 3ம் பாகமும் இதே போல் மாஸ் காட்டும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் புஷ்பா படத்தில் முக்கிய கேரக்டர்களில் முதலில் நடிக்க இருந்தது இப்போதைய நடிகர்கள் அல்ல என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக படத்தில் ஹீரோ அல்லு அர்ஜூன் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லன் பகத் பாசில் கேரக்டர்களில் முதலில் நடிக்க இயக்குனர் சுகுமாரன் அணுகிய வேறு நட்சத்திரங்களை தான் என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி புஷ்பா படத்தில் நாயகனாக நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நாயகியாக நடிக்க நடிகை சமந்தா வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை தான் இயக்குனர் சுகுமாரன் அவர்களிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்த நிலையில்தான் அடுத்த வாய்ப்பாக அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் புஷ்பா படத்தில் நடித்துள்ளனர்.





