- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படப்பிடிப்பு தளத்தில் மலர்ந்த பாசம்... லோகேஷ் கனகராஜை மகனே என்று அன்போடு அழைத்த சஞ்சய்...

லியோ படப்பிடிப்பு தளத்தில் மலர்ந்த பாசம்… லோகேஷ் கனகராஜை மகனே என்று அன்போடு அழைத்த சஞ்சய் தத்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக கமிட்டாகி உள்ள திரைப்படம், லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் மீண்டும் இணைந்து இருக்கிறார். இதில், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் விமானத்தில் காஷ்மீர் செல்லும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு சூட்டிங் நடைபெற, அது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு படக்குழு ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து, சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் லியோ படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்திலிருந்து நா ரெடி தான் பாடல் வெளியானது. விஜய் தனது சொந்த குரலில் இந்த பாடலை பாடியிருந்தார்.

2 ஆயிரம் நடன கலைஞர்களுடன் மிகப்பிரமாண்டமாக இந்தப் பாடல் எடுக்கப்பட்டது. அனிருத்தின் தெறிக்கும் இசையில், இணையத்தில் வைரலான இந்த பாடல், இளைஞர்கள் பலரது செல்போன் ரிங்டோனாக மாறியிருக்கிறது. தொடர்ந்து விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்ற நிலையில், கடந்த மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாக இருப்பதால், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விக்ரம் படத்தில் எல் சி யு எனும் கான்செப்ட்டை லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்தார். இது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றதால் இந்தப் படமும் எல் சி யு-வில் இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் சஞ்சய்தத் பிறந்தநாளன்று, அப்டேட் வெளியிட்ட படக்குழு, அவர் அந்தோணி தாஸ் என்ற கதாபாத்திரத்தின் நடிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பில் சஞ்சய் தத் தன்னை மகன் என்று தான் அழைப்பார் என்று கூறியிருக்கிறார். மேலும் தனது பணி அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தானும் யாரையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜுன் பிறந்த நாளன்று, லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்