எப்படிப்பட்ட கேரக்டர் தந்தாலும் அந்த கேரக்டராக மாறி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் நிழல்கள் ரவி. ஆரம்பத்தில் சில படங்களில் நாயகனாக நடித்தார். பிறகு பல படங்களில் வில்லன் கேரக்டரிலும் அசத்தினார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என எந்த மொழியிலும் நிழல்கள் ரவி போன்ற நடிகரை இயக்குனர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நடிப்பது மட்டுமின்றி நிழல்கள் ரவி குரலுக்கும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். பல படங்களில் முக்கிய கேரக்டர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் நிழல்கள் ரவி என்பது பலரும் அறியாத உண்மை.
நடிகர் நிழல்கள் ரவியை பொருத்த வரை தமிழில் பல படங்களில் ஹீரோவின் நண்பன் பணக்கார மாப்பிள்ளை தொழிலதிபர் டாக்டர் போன்ற கேரக்டர்களில்தான் அதிகமாக நடித்திருக்கிறார். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படாத பொக்கிஷமான நடிகர்களில் ஒருவர் நிழல்கள் ரவி என்றால் அது மிகையல்ல.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் நிழல்கள் ரவி கூறியதாவது, ஒரு படத்தில் 2 வேடங்களில் அதாவது டபுள் ஆக்சன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. ஆனா அந்த வாய்ப்பு இன்னும் வரலே. கூடிய சீக்கிரம் வந்துடும். டைரக்சன் பண்ண வேண்டும் என்ற ஆசையும் இருக்கு. அதுவும் அப்பப்போ வரும்.
அதை தட்டி நான் ஒழுங்கா இருன்னு வெச்சிடுவேன். டைரக்ஷன் என்பது எளிதான விஷயம் இல்லே. ரொம்ப கஷ்டமான விஷயம். 24 மணி நேரம் அதைப் பத்தியே சிந்திச்சிட்டு இருக்கணும். நாம அந்த மாதிரி கேரக்டர் கிடையாது. எப்பவும் ஜாலியாக வாழ்க்கையை ரசிக்கிற டைப்.
ஆனா கண்டிப்பா டைரக்சன் பண்ணுவோம். நேரம் வரும்போது அது ஆட்டோமேடிக்கா நடக்கும். ஆனா தயாரிப்பாளர் யாரும் என்கிட்ட கேட்கலே. ஆனா பிரண்ட்ஸ் ஒரு பிளான் பண்ணினாங்க. அவங்க எல்லாம் யுகேவில் இருக்காங்க. நான்தான் கொஞ்ச நாள் ஆகட்டும் வெயிட்டு பண்ணுங்க என்று சொல்லிட்டேன். சிங்கத்தை தட்டி வெச்சிருக்கேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் நிழல்கள் ரவி கூறியிருக்கிறார்.





