- Advertisement -
Homeபொழுதுபோக்குவிலைவாசியை விட வேகமாக உயரும் தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் எண்ணிக்கை, 1 கோடியை நெருங்கியதா?...

விலைவாசியை விட வேகமாக உயரும் தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் எண்ணிக்கை, 1 கோடியை நெருங்கியதா? திக்குமுக்காடிப் போன தமிழக அரசியல் கட்சிகள்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தளபதி 69 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற பிப்ரவரி இறுதிக்குள் முடிவடைய உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டில் தீபாவளிக்குதான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நடிகர் தனது கடைசி படமாக இதை ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் படப்பிடிப்பை முடித்த பிறகு தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி அரசியல் பணிகளில் ஈடுபட போகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

முதலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியதாக அறிவித்த போது, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. கமல்ஹாசனை போல இவரும் ஒரு நடிகர், அரசியலுக்கு வரும் ஆசையில் கட்சி துவங்கியிருக்கிறார் என்று அலட்சியமாக தான் நினைத்தனர். கட்சி கொடியை அறிமுகப்படுத்திய போது கிண்டல் செய்தனர்.

ஆனால் கடந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய்விட்டனர். 48 நிமிடங்கள் மாநாட்டில் விஜய் பேசிய ஆவேசத்தை பார்த்து அரண்டு போய்விட்டனர். இவரது அரசியல் வீச்சு நிச்சயமாக வருகிற சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்பது அவர்களுக்கு தெளிவாக புரிந்து போய்விட்டது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் விஜய், கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தனது தவெக கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அவர் தன்னை முதல் உறுப்பினராகவும் அதில் இணைத்துக்கொண்டார். செயலி துவங்கிய 3 நாட்களில், 50 லட்சம் பேருக்கு மேல் கட்சியில் உறுப்பினரானதால் செயலியே முடங்கிப் போனது. அந்தளவுக்கு ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் செயலில் உறுப்பினராக சேர முயன்றதால் செயலியே ஸ்தம்பித்துப் போனது.

கடந்த மாதம் அரசியல் மாநாடு முடிந்த நிலையில், மீண்டும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைை அதிகரிக்க கட்சி நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை 90 லட்சம் பேர் தவெக கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கை விஜய் கட்சி வெகு எளிதாக அடைந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்