திருமணம் செய்துக்கொண்டால் நடிகைகளின் மார்க்கெட் இமேஜ் போய்விடும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஒரு விதத்தில் அது உண்மையாக கருதப்பட்டாலும் கூட திருமணத்துக்கு பிறகும் பல நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நீடித்திருக்கின்றனர். பல வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்திருக்கின்றனர்.
எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் சரோஜா தேவி சாவித்திரி பானுமதி பத்மினி கேஆர் விஜயா போன்ற பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் நாயகியாக நடித்தனர். 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நீடித்திருந்தனர். இப்போதும் குஷ்பு மீனா நதியா நயன்தாரா போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகும் நடித்தவர்களாக தான் இருக்கின்றனர்.
ஆனாலும் சில நடிகைகள் சில நடிகர்கள் 40 வயதுகளை கடந்த நிலையிலும் திருமண வாழ்க்கைக்குள் வர மறுக்கின்றனர். இதற்கு சினிமா மார்க்கெட் இமேஜ் கடந்தும் சில காரணங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. குறிப்பாக நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் நடிக்க விரும்புகின்றனர். ஆனால் நிச்சயமாக அதை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் நாளடைவில் மறுக்க வாய்ப்புள்ளதால் திருமணம் தவிர்க்கின்றனர்.
ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரு நடிகை, பொருளாதாரரீதியாக வசதிபடைத்த நிலையில் வாழும்போது திருமண வாழ்க்கையால் தங்களது வருமானத்தை இழக்கவும், குடும்ப வாழ்க்கையில் கணவன் பிள்ளைகள் கணவன் குடும்பத்தார் என ஒரு வட்டத்தில் கட்டுப்பாட்டில் சிக்கிக் கொள்ளவும் தயாராக இல்லை.
அதனால்தான் நடிகை திரிஷா அனுஷ்கா போன்றவர்கள் 40 வயது கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றனர். ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஜெயலலிதா கோவை சரளா போன்றவர்களும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. நக்மா தபு பூணம் பஜ்வால் கிரண் ரத்தோர் கவுசல்யா சித்தாரா போன்ற நடிகைகளும் இந்த வரிசையில் முரட்டு சிங்கிளாக உள்ளனர்.
அதே போல் 40 வயதுகளை கடந்த தமிழ் நடிகர்கள் சிம்பு விஷால் பான் இந்தியா நடிகர் பிரபாஸ் போன்றவர்களும் திருமண வாழ்வில் ஆர்வமின்றி புறக்கணிக்க காரணம், பெரும்பாலான நடிகர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதுதான். காதல் திருமணம் நிச்சயித்த திருமணம் என பாகுபாடின்றி நடிகர் நடிகைகள் திருமண விவாகரத்துகள் அதிகரித்து வருவதால், நமக்கும் அந்த நிலை வரலாம் என்ற அச்சம்தான் அவர்கள் திருமணத்தை தவிர்க்க அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது.





