தமிழ் சினிமாவில் பல சீனியர் நடிகர்கள் இருந்தாலும் பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் உடன் நடிக்க பயப்படுவது யாரிடம் என்று கேட்டால் அது காமெடி கிங் நடிகர் கவுண்டமணியுடன்தான். ஏனென்றால் ரஜினி கமல் போன்றவர்களையே படத்திலும் நேரிலும் சகஜமாக கலாய்த்து விடுவார் நடிகர் கவுண்டமணி.
இந்தியன் படத்தில் நடிகர் கமலையும், பாபா படத்தில் நடிகர் ரஜினியையும் சில காட்சிகளில் கவுண்டமணி சரியாக நக்கலடித்திருப்பார். இது சற்று கவனித்து பார்த்தால்தான் ரசிகர்களுக்கு புரியும். எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை நேருக்கு நேர் விமர்சித்து பேசுவது, கலாய்ப்பது கவுண்டமணியின் கைவந்த கலை.
சீனியர் நடிகராக அவர் இருப்பதால் கவுண்டமணி திட்டும் விதமாக பேசினாலும் கூட நடிகர்கள் அவரிடம் கோபப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் ரஜினி கமல் படங்களில் கவுண்டமணி நடித்தால், இயக்குனரிடம் தனியாக அழைத்து, ஸ்கிரிப்ட்டில் இருக்கிறதை மட்டும் கவுண்டமணியை பேச சொல்லுங்க, ஷாட் எடுக்கும் போது அவர் தாறுமாறா டயலாக் பேசாமல் பார்த்துக்கங்க என்றும் ஸ்பெஷலாக கூறி விடுவர்.
இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கவுண்டமணி குறித்து கூறியதாவது, வீரா படத்தின் ஷூட்டிங்கில் நானும் நடிகர் செந்திலும் நடித்துக்கொண்டு இருந்தோம். அப்போ நடிகர் கவுண்டமணி செந்திலுக்கு போன் பண்ணி எங்கேடா இருக்கே என்று கேட்டார். அவருக்கு ஷூட்டிங் இல்லை என்றால் செந்திலுக்கு போன் பண்ணி விடுவார்.
செந்தில் ஷூட்டிங்கில் இருந்தாலும் கூட வீட்டுல இருக்கேன் அண்ணா என்று சொல்வார். இவர் ஷூட்டிங்கில் இருக்கிறேன் என்று சொன்னால், அவருக்கு வேலை இல்லை என்பதால் அப்படி சொல்வார். ஆனா ஒருமுறை செந்தில் மாட்டிக்கிட்டார். ஏன்னா, கவுண்டமணி வீட்டுக்கு பக்கத்தில்தான் வீரா படம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு.
அப்போ கவுண்டமணி செந்திலுக்கு போன் பண்ணிட்டார். எங்கடா இருக்கே என்று கேட்டார். ஷூட்டிங்கில் இருக்கேன் அண்ணா என்று செந்தில் சொல்லி விட்டார். யாருடா ஹீரோ எனக் கேட்டார். ரஜினிகாந்த் அண்ணா என்று செந்தில் சொல்ல, ரஜினிகாந்த் ஹீரோவா? ஏண்டா அவரே புல் காமெடியும் பண்ணிடுவார். நீ என்னடா பண்றே அங்கே? வாடா இங்கே என்று போனில் சொன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தன்னை பற்றி கவுண்டமணி கலாய்த்ததை அந்த விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





