- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு காரணத்தால் என்னை அந்த படத்தில் நிராகரித்து விட்டார்கள், ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் பட...

அந்த ஒரு காரணத்தால் என்னை அந்த படத்தில் நிராகரித்து விட்டார்கள், ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே – என்ன கொடும சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற ஒரு நடிகையாக மாறி வருகிறார் பூஜா ஹெக்டே. கடந்த 2012ம் ஆண்டில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்த படம் முகமூடி கொள்ளையர்களை பற்றியது. வசதியான வீடுகளில் வசிக்கும் வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல், அவர்களை கொடூரமாக கொலை செய்வதுதான் கதை. இதில் வில்லனாக நரேஜ் நடித்திருந்தார். படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இல்லாததால் ரசிகர்களிடம் இந்த படம் எடுபடவில்லை.

- Advertisement -

அதனால் முகமூடி படத்தின் தோல்வியால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை நாயகியான அறிமுகமான பூஜா ஹெக்டே பெற முடியவில்லை. ஆனால் பிறகு இந்தி தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய அவர், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் 2வது ரவுண்டை ஆரம்பித்தார்.

தொடர்ந்து இப்போது ஜனநாயகன் படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அவர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 படத்திலும் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, சமீபத்தில் நான் ஒரு தமிழ் படத்திற்கு ஆடிசன் சென்றிருந்தேன். ஆனால் அந்த படத்தில் இருந்து நான் வேண்டாம் என நிராகரிக்கப்பட்டேன். நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் இளமையாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அதனால் என்னைவிட வயதில் மூத்த ஒரு நடிகையை தேர்வு செய்தார்கள்.

னால் அதற்கு நான் வெட்கப்படவில்லை. எப்போதும் ஆடிசனுக்கு செல்ல தயாராகவே இருக்கிறேன். ஈகோ உங்கள் திறமையில் தலையிட எப்போதும் அனுமதிக்காதீர்கள். பலருக்கும் ஆடிஷன் செல்லும் பாக்கியம் கிடைக்காது. எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில பெரிய நட்சத்திரங்கள் இன்னும் ஆடிஷன் செல்கிறார்கள் என்று நடிகை பூஜா ஹெக்டே கூறியிருக்கிறார். இளமையாக இருக்கிறார் என்பதற்காக ஒரு படத்தில் நிராகரிக்கப்பட்டாரா என பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்