- Advertisement -
Homeபொழுதுபோக்குபாசக்கார பயபுள்ளயா இருக்கியேப்பா… மாமன் பட ஷூட்டிங்கில் நடிகர் சூரியை சந்தித்த பிரபல நடிகர் -...

பாசக்கார பயபுள்ளயா இருக்கியேப்பா… மாமன் பட ஷூட்டிங்கில் நடிகர் சூரியை சந்தித்த பிரபல நடிகர் – சகோதர பாசம் என்பது இதுதானோ…?

- Advertisement -

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்து பெரிய அளவில் முன்னுக்கு வந்தவர் நடிகர் சூரி. ஒரு கட்டத்தில் அவரை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாற்றினார்.

தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி படங்களில் நாயகனாக நடித்த சூரி இப்போது மாமன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். விலங்கு என்ற வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

மாமன் படத்தில் நடிகர் சூரியுடன் ராஜ்கிரண் ஐஸ்வர்யா லட்சுமி விஜி சந்திரசேகர் சுவாசிகா ஜெயப்பிரகாஷ் பாபா பாஸ்கர் பால சரவணன் கீதா கைலாசம் நிகிலா சங்கர் மாஸ்டர் பிரதீப் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஹேஷாம் அப்துல் வகாப் என்பவர் இசையமைக்கிறார்.

தாய்மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமலும் படைப்பாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே குமார் தயாரிக்கிறார். 6 வயது சிறுவனுக்கும் அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இந்த படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக மாமன் படம் உருவாகி வருகிறது.

இப்போது மாமன் படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மாமன் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென விசிட் செய்து சூரி மற்றும் மாமன் பட குழுவினரை சந்தித்து பேசி உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோவை மாமன் படக்குழு வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி ஆரம்பத்தில் பல படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் காமெடி ரோலில் நடித்தவர். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா ரஜினி முருகன் மனம் கொத்திப் பறவை என பல படங்களில் சூரி எஸ்கே காம்பினேஷன் காமெடி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூரியை அண்ணா என்றுதான் சிவகார்த்திகேயன் அழைத்து வருகிறார். அந்த பழைய பாசத்தை மறக்காமல் சூரி மீது அதிக அன்பு கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் மாமன் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று சூரியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்