இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்த படம் நாடோடிகள். இதில் சசிக்குமாரின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் அபிநயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. காது கேட்கும் திறன், பேசும் திறனில் குறைபாடு உடையவர். ஆனால் அவர் நடிக்கும் படங்களில் அந்த குறையே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.
நாடோடிகள் படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல படங்களில் அபிநயா நடித்து வருகிறார். இப்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் அபிநயா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கார்த்திக் என்ற தொழிலதிபரை அபிநயா கடந்த 16ம் தேதி காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில் தனது கணவர் கார்த்திக் குறித்து நடிகை அபிநயா கூறியதாவது, நாடோடிகள் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு தெலுங்கில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இதனால் என்னை போன்ற குறைபாடு உடையவர்கள் இணைந்து ஒரு குரூப்பை உருவாக்கினோம்.
அந்த குரூப் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் கார்த்திக். அவரும் என்னை மாதிரியே பேச்சு மற்றும் செவித்திறன் சவால் கொண்டவர்தான். அவர் தனது அக்காவோடு தான் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவங்க அக்காவும் அதே மாதிரி சவால் கொண்டவர்தான். ரெண்டு பேருமே என்கிட்ட பாசமா பேசி பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.
இந்த உலகத்திலேயே எனக்கு அம்மாவை தான் ரொம்ப பிடிக்கும். அம்மாவோட பாசத்தை நான் கார்த்திக்கிடம் உணர்ந்தேன். அதுதான் எங்கள் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வைத்தது. அவருடைய குணம் எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பிடித்திருந்தது. அதனால் தான் வெவ்வேறு சமூகத்தினராக இருந்தாலும் இரண்டு வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க.
கார்த்திக் ஒரு பிசினஸ்மேன். ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் டைரக்டராக இருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் போன பிறகுதான் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் அம்மா இறந்து விட்டதால் தனிமையை போக்க நான் முன்னதாகவே திருமணம் செய்து கொண்டேன் என்று அபிநயா அந்த நேர்காணலில் வெளிப்படையாக தன் கணவர் குறித்து கூறியிருக்கிறார்.





