- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இயக்குனர் சுந்தர் சியுடன் கைகோர்த்த நடிகர் வடிவேலு - வின்னர் படம் கைப்புள்ள யாக...

மீண்டும் இயக்குனர் சுந்தர் சியுடன் கைகோர்த்த நடிகர் வடிவேலு – வின்னர் படம் கைப்புள்ள யாக வைகைப்புயலை காண ஆசைப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து முறைமாறன் மேட்டுக்குடி அருணாசலம் அன்பே சிவம் ரெண்டு கிரி வின்னர் லண்டன் என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறினார்.

சுந்தர் சி படங்களை பொருத்த வரை காதல் காமெடி கவர்ச்சி குடும்ப சென்டிமென்ட் படத்தில் பிரதானமாக இருக்கும். ரசிகர்களின் பொழுதுபோக்கு படங்களை தருவதில் இயக்குனர் சுந்தர் சி எப்போதுமே கை தேர்ந்தவராக இருந்து வருகிறார். இடையில் அரண்மனை அரண்மனை 2 3 மற்றும் 4 என தொடர்ந்து திரில் திகில் படங்களை தந்தும் ரசிகர்களை அசத்தி விடுகிறார்.

- Advertisement -

ஆரம்பத்தில் நடிகர்கள் கவுண்டமணி செந்தில் ஆகியோரை தனது படங்களில் நடிக்க வைத்தார். பிறகு ஜனகராஜ் விவேக் வடிவேலு மனோபாலா சந்தானம் யோகிபாபு என முன்னணி காமெடி நடிகர்களை தனது படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வைத்து விடுவார். மதகஜ ராஜா படம் வரை காமெடி தர்பார் நடத்தி வருகிறார் இயக்குனர் சுந்தர் சி.

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய படங்களில் நடிகர் வடிவேலுவுக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தலைவராக கைப்புள்ள கேரக்டரில் வடிவேலு நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதே போல் சுந்தர் சி இயக்கிய கிரி படத்தில் பேக்கரி ஓனர் வீரபாகு கேரக்டரில் வடிவேலு நடிப்பு ரசிகர்களால் மறக்கவே முடியாது.

- Advertisement -

இதுதவிர சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில் கிரிகாலன் மேஜிக் ஷோ லண்டன் படத்தில் வக்கீல் வெடிமுத்து இதுதவிர சுந்தர் சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் நாய் சேகர் கேரக்டரில் வடிவேலுவின் நடிப்பு நகரம் மறுபக்கம் படத்தில் ஸ்டைல் பாண்டி போன்ற காமெடி ரோலில் வடிவேலு நடிப்பு காட்சிக்கு காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கேங்கர்ஸ் படத்தில் நாயகியாக கேத்தரின் தெரசா மற்றும் வாணிபோஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நாளை (24ம் தேதி) இந்த படம் வெளியாக உள்ள நிலையில், பழைய வடிவேலுவாக கைப்புள்ள யாக கிரிகாலனாக ஸ்டைல் பாண்டியாக நாய் சேகராக திரையில் கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்