- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயாரான நடிகர் சிவகார்த்திகேயன், முக்கிய கண்டிஷன் போட்ட ஏஆர் முருகதாஸ் -...

மதராஸி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயாரான நடிகர் சிவகார்த்திகேயன், முக்கிய கண்டிஷன் போட்ட ஏஆர் முருகதாஸ் – அதற்காக காத்திருக்கும் எஸ்கே!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து இப்போது நடித்து வரும் படம் பராசக்தி. இது இவரது 25வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா டைரக்ட் செய்கிறார். ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீலீலா நாயகியாகவும் அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிக்கின்றனர். குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் படத்தில் நடித்து வருகின்றனர்.

அமரன் படத்தை போலவே பராசக்தி படமும் பயோபிக் கதைதான் என்பது கவனிக்கத்தக்கது. அமரன் படத்தில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இப்போது பராசக்தி படத்தில் மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்ற கேரக்டரில் அவரது வாழ்க்கை வரலாறு கதையில் நடித்து வருகிறார்.

கடந்த 1960 – 65களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் இருந்த படம் உருவாகிறது. இதில் கல்லூரி மாணவராக இந்தியை எதிர்க்கும் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதற்காக கிளீன் சேவ் செய்து மாணவர் கெட்டப்பில் அவர் இளைஞராக இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்த போதே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். இடையில் இந்தியில் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தா் படத்தை இயக்க அழைப்பு வந்ததால் ஏஆர் முருகதாஸ் இந்திக்கு சென்று விட்டார்.

அதே போல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும் சென்றுவிட்டார். அதனால் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஷூட் செய்யப்பட வேண்டி இருப்பதால், பராசக்தி படத்துக்கு இடையே மதராஸி படப்பிடிப்பிலும் சிவகார்த்திகேயன் கலந்துக்கொள்ள உள்ளார்.

இந்த சூழலில் பராசக்தி படத்தில் மாணவராக நடிப்பதால் கிளீன் சேவ் செய்து தாடியின்றி லேசான மீசையுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் மதராஸி படத்தில் தாடி மீசையுடன் அவர் இருக்க வேண்டும். அதனால் தாடி மீசை கெட்டப்பில்தான் நீங்கள் வர வேண்டும். ஒட்டுதாடி வேண்டாம் என்று ஏஆர் முருகதாஸ் கண்டிஷனாக சொல்லி விட்டார். அதனால் பராசக்தி படப்பிடிப்பு முடிந்த பிறகு 2 வாரங்களுக்கு தாடி வளரும் வரை சிவகார்த்திகேயன் காத்திருந்து ஏஆர் முருகதாஸ் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

சற்று முன்