- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துல புஸ்லி ஆனந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? இணையத்தில் வைரலான தகவல் - உண்மையான...

விஜய் படத்துல புஸ்லி ஆனந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? இணையத்தில் வைரலான தகவல் – உண்மையான நிலவரம் இதுதான்…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

சென்னை மற்றும் பையனூர் பகுதிகளில் ஜனநாயகன் படத்தில் ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்த நிலையில் இப்போது கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். பிறகு அங்கிருந்து காரில் கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி என்ற பகுதியில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இங்கு 5 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளில் கனமழை காரணமாக ஷூட்டிங் தடைபட்டதால் ஓரிரு தினங்கள் ஷூட்டிங் நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் தலைவராக விஜய் பொதுச் செயலாளராக புஸ்லி ஆனந்த் உள்ளனர். நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் துவங்கிய காலத்தில் இருந்தே புஸ்லி ஆனந்த் விஜயுடன் இருந்து வருகிறார்.

- Advertisement -

அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த புஸ்லி ஆனந்துக்கு தனது கட்சியில் பொதுச் செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பை விஜய் வழங்கியிருக்கிறார். எப்போதுமே நடிகர் விஜய் கலந்துக்கொள்ளும் சினிமா சார்ந்த விழாக்களில் புஸ்லி ஆனந்த் காணப்படுவார். அங்கு வரும் ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்துவார். இப்போது அரசியல்வாதியாக விஜய்க்கு பக்கபலமாக பாதுகாப்பாக இருக்கிறார்.

இந்நிலையில் கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், புஸ்லி ஆனந்த் அங்கு காணப்பட்டார். படப்பிடிப்பு தளத்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார். அதனால் அந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று தகவல் இணையத்தில் தீயாக பரவியது. விஜயின் கடைசி படம் என்பதால் அவரும் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் விஜயை பார்க்க வரும் ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியில் தான் புஸ்லி ஆனந்த் ஈடுபட்டு வருகிறார். இது யாரோ கிளப்பிவிட்ட புரளி என்ற உண்மை வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்