- Advertisement -
Homeபொழுதுபோக்கு25 கோடி ரூபாய் கடன் வாங்கினேனா?.. என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் - சமந்தா அதிரடி...

25 கோடி ரூபாய் கடன் வாங்கினேனா?.. என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் – சமந்தா அதிரடி விளக்கம்

- Advertisement -

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா மாஸ்கோவின் காவேரி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதற்கு முன்னதாகவே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஒரு சில சீன்களில் தலைகாட்டிவிட்டார். அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் நடித்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் சமந்தாவின் அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர வாய்ப்புகள் சரளமாக அமைய ஆரம்பித்தன.

அதனைப் பயன்படுத்தி தமிழில் விஜய்யுடன் கத்தி, மெர்சல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானார்.அதேபோல் தெலுங்கிலும் அறிமுகமாகி உச்சம் சென்ற அவர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது இருவருக்கும் காதல் வந்தது.

- Advertisement -

இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடந்தது. பிறகு சுமூகமாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து இரண்டு பேருமே பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்தப் பிரிவால் சமந்தாவின் கரியக் நிச்சயம் அடிபடும் என பலரும் ஆரூடம் கூற அதையெல்லாம் அடித்து நொறுக்கும்படி அமைந்தது சமந்தாவின் பயணம். புஷ்பாவில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நடித்தது, ஹாலிவுட் படத்தில் கமிட்டானது என பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால், மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் அவரை தாக்கியது. இதனால் சிகிச்சை எடுத்த அவர் ஒருவழியாக அதிலிருந்து மீண்டார். மீண்டவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அதன்படி அவர் நடித்த சாகுந்தலம் படம் தோல்வியை சந்திக்க; குஷி படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.

- Advertisement -

நிலவரம் இப்படி இருக்க திடீரென சமீபத்தில் அவர் தான் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்குவதாக அறிவித்து வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். அவரது உடல்நிலையால்தான் சினிமாவிலிருந்து ஒதுங்குகிறார் என பலர் கூறினர். ஆனால் அதுகுறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. தனது தோழியுடன் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

இந்நிலையில் சமந்தாதன்னுடைய சிகிச்சைக்காக பிரபல நடிகரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும்; விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் சமந்தா, “மையொசிடிஸ் சிகிச்சைக்காக நடிகரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கினேனா?.. யாரோ உங்களுக்கு மோசமான டீலை கொடுத்திருக்கிறார்கள்.

.Samantha Insta

மையோசிடிஸுக்காக நான் மிக மிக குறைவான தொகையைத்தான் செலவழிக்கிறேன். என்னை என்னால் பார்த்துக்கொள்ள முடியும். உழைத்ததற்காக எனக்கு பணமும் வந்தது. மையோசிடிஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே அதற்கான சிகிச்சை முறை குறித்து தகவல் வெளியிடும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார்

- Advertisement -

சற்று முன்