நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 தினங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விடும். அதன்பிறகு மே 1ம் தேதி, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ரஜினி 171 படம், துவக்க பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
வருகிற ஜூன் மாதம் வரை, கடுமையான வெயில் நீடிக்கும் என்ற நிலையில் படப்பிடிப்பை தள்ளிப் போட வேண்டாம். எனக்கு ஜெயிலர் 2, மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க கமிட்மெண்ட் உள்ளது. அதனால் அடுத்தடுத்த பணிகளை தாமதமின்றி, அதிக நேரம் வீணடிக்காமல் விரைவில் முடித்தாக வேண்டும் என ரஜினி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி 171 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை அழைத்து ஒரு அவசர மீட்டிங் போட்டு பேசியிருக்கிறது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் மனோஜ் பரமஹம்சர். அவர் அந்த படத்துக்கு அவுட்டோர் ஷூட்டிங் செலவு என்ற வகையில் 13 கோடி பில் வைத்துவிட்டார்.
விஜய் நடித்த படம் என்பதால் அந்த படத்தில் அதுசம்பந்தமாக நாங்கள் எதையும் விசாரிக்கவில்லை. மேலும், அவுட்டோர் ஷூட்டிங் யூனிட் வைத்திருப்பதே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சர்தான். அதனால் அதிக செலவு காட்டிய அவர், ரஜினி 171 படத்தில் பணி செய்ய வேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறியிருக்கின்றனர்.
ஆனால் தனது படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்து வரும் மனோஜ் பரமஹம்சர், தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் இதற்கு லோகேஷ் கனகராஜ் மறுப்பு தெரிவித்து, இந்த படத்தில் அவரே பணியாற்றட்டும். அதே வேளையில் ரஜினி 171 படத்தில் அவர் பணியாற்றுவது மிகவும் கட்டாயம் என்றும் கூறியிருக்கிறார்.
ஏனெனில் ரஜினி 171 படத்தில் ஒளிப்பதிவுக்காக அமெரிக்காவில் இருந்து ஐ மேக்ஸ் என்ற நவீன கேமரா ரகங்கள் வரவழைக்கப்படுகிறது. இதை கையாள தெரிந்தவர் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சர்தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த கேமராவுடன் 10 பேர் வரை தொழில்நுட்ப வல்லுனர்களும் அமெரிக்காவில் இருந்து வர வேண்டும். இந்த கேமராவில் பிலிமில் படம் எடுத்து டிஜிட்டலில் மாற்ற ஏகப்பட்ட பணிகள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார். இதற்கான செலவுகளை கணக்கிட்ட சன் பிக்சர்ஸ் ஒளிப்பதிவாளரை மாற்றுங்கள். இந்த ஐ மேக்ஸ் கேமராவும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அதிரடியாக கூறிவிட்டனர். விரைவில் ரஜினியிடம் இதுகுறித்து பேச இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





