இயக்குனர் பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி கோபிகா நடித்த படம் வீராப்பு. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் சுமித்ரா பாலு ஆனந்த் தேஜாஸ்ரீ சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் விவேக் காமெடி ரோலில் ரத்தன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதில் லாரி ஓட்டுனராக இருந்த விவேக், அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கி வேன் ஆட்டோ என கடைசியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக விவேக் மாறிவிடுவார்.
இந்த படத்தில் நடிகர் விவேக்குக்கு ஜோடியாக கொடி என்ற கேரக்டரில் நடிகை அஞ்சு காமெடி ரோலில் நடித்திருப்பார். அதே போல் சுந்தர் சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்திலும் நடிகர் விவேக்குக்கு மனைவியாக அஞ்சு நடித்திருப்பார். இவர்களது ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகை அஞ்சு குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் படங்களில் நடித்தவர். பிறகு கேளடி கண்மணி படத்தில் ரமேஷ் அரவிந்த் ஜோடியாக அஞ்சு நடித்திருந்தார். பிரதாப் என்ற படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு தங்கையாக நடித்திருப்பார். அரங்கேற்ற வேளை அபிராமி இளவரசி பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் அஞ்சு நடித்திருக்கிறார். குறிப்பாக சித்தி கிருஷ்ணதாசி சூலம் செல்வி அரசி மகராசி போன்ற சீரியல்களில் அஞ்சு நடித்திருக்கிறார். அதே போல் மலையாளம் மற்றும் தெலுங்கு தொடர்களிலும் அஞ்சு நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் பொல்லாதவன். இதில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு அம்மாவாக பானுப்பிரியா நடித்திருந்தார். இந்த படம் 2007ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் கிஷோரின் மனைவியாக நடிகை அஞ்சு நடித்திருந்தார். இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய போது ரசிகர்களுக்கு நடிகை அஞ்சு பகிர்ந்திருக்கிறார்.
பொல்லாதவன் படம் குறித்து நடிகை அஞ்சு கூறியதாவது, பொல்லாதவன் படத்தில் பானுப்பிரியா நடித்த அம்மா ரோல் நான் நடிக்க வேண்டியது. தனுஷூக்கு அம்மாவாக நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். பிறகு வில்லனின் மனைவி கேரக்டர் எனக்கு கொடுத்தாங்க. எனக்கும் தனுஷூக்கும் பெரிய வயசு வித்தியாசம் இல்லை. அதனால் அந்த கேரக்டர் நான் பண்ணலே. ஆனால் அந்த படத்துல நடிச்சதுக்கு நிறைய பாராட்டு எனக்கு கிடைத்தது என்று நடிகை அஞ்சு கூறியிருக்கிறார்.





