- Advertisement -
Homeபொழுதுபோக்குபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - தவெக தலைவர் நடிகர்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு – தவெக தலைவர் நடிகர் விஜய் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

- Advertisement -

கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு கும்பல் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் கொடுமைகளை செய்தது. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டு 1500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்க செய்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இன்று அந்த வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

- Advertisement -

கடந்த 6 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டு உள்ளனர். அதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். எனவே குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

- Advertisement -

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததை கொண்டாடும் இக்காலத்தில் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமன்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்வித சமரசமும் இன்றி உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்