- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... ராம்சரண் படத்துக்கு பாடல்கள் மட்டும் இத்தனை கோடி செலவா... மீண்டும் சேட்டையை காட்டிய ஷங்கர்......

என்னது… ராம்சரண் படத்துக்கு பாடல்கள் மட்டும் இத்தனை கோடி செலவா… மீண்டும் சேட்டையை காட்டிய ஷங்கர்… இயக்குனரிடம் வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு தயாரிப்பாளர்…

- Advertisement -

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி 2.ஓ வரை படத்துக்கு படம் வித்தியாசத்தை கொடுத்த ஷங்கர், இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஷங்கரின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது நிச்சயம் இந்தியன்தான்.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடிக்க, ஊழலுக்கு எதிராக எழுதப்பட்ட ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களை எளிதில் அடைந்தது. சேனாதிபதியாக வாழ்ந்த கமல்ஹாசன், லஞ்சம் வாங்கிய தனது மகனையே யோசிக்காமல் கொலை செய்யும் காட்சி இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கையில் எடுத்தார் ஷங்கர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, சூட்டிங் பணிகளும் வேகம் எடுத்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்துடன் தகராறு, கமல்ஹாசன் ஷங்கர் இடையே மனஸ்தாபம், படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் பார்ட் 2 பட வேலைகள் நின்று போனது.

இதன் காரணமாக தெலுங்கு பட உலகிற்கு சென்ற இயக்குனர் சங்கர், ராம்சரணை வைத்து படம் எடுக்க முனைப்பு காட்டினார். வாரிசு படத்தை எடுத்த தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க, கியாரா, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்தனர். முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு, கேம் சேஞ்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியன் 2 விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதால் மீண்டும் கமல் படம் கையில் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியன் பார்ட் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு பட பணிகளிலும் ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் 10 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த பாடலுக்காக அவர் 90 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாகவும், இதற்கு தயாரிப்பாளர் தில் ராஜூவும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கர் பாடலுக்கு மட்டும்தான் செலவு செய்வார் என்றும், இதையே பிரம்மாண்டம் என வெளியே கூறி கொள்வார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். அது சரியான கூற்று என்பது போலவே இந்த படத்திலும் சங்கர் தொடர்வதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

சற்று முன்