- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆருக்கு போன் செய்து உதவி கேட்ட துணை நடிகர், மறுநாள் ராமாவரம் தோட்டத்தில் அந்த நடிகருக்கு...

எம்ஜிஆருக்கு போன் செய்து உதவி கேட்ட துணை நடிகர், மறுநாள் ராமாவரம் தோட்டத்தில் அந்த நடிகருக்கு நேர்ந்த சம்பவம் – பொன்மனச் செம்மல்ன்னு சும்மாவா சொன்னாங்க!

- Advertisement -

ஒருமுறை காரில் சென்ற ஒரு செல்வந்தர், காரை நிறுத்தி ரோட்டோரத்தில் இருந்த வயதான மூதாட்டியை அழைத்து 100 ரூபாய் அன்பளிப்பாக அவருக்கு தந்திருக்கிறார். அந்த செல்வந்தர் அங்கிருந்த போன பின்பு அந்த மூதாட்டி, அங்கிருந்தவர்களிடம் எல்லாம் எனக்கு எம்ஜிஆர் காரை நிறுத்தி 100 ரூபாய் தந்துவிட்டு போனார் என்று கூறியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ஒருவர் உதவி செய்தாலே அவர் எம்ஜிஆராக தான் இருக்க முடியும் என்கிற அளவுக்கு தமிழக மக்கள் மனங்களில் வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அதனால்தான் அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவரது பெயரை சொல்லி பல அரசியல்வாதிகள் தமிழகத்தில் அரசியல் செய்துக்கொண்டிருக்கின்றனர்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் மற்றவர்களுக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் முக்கிய கொள்கையாக அவர் கடைபிடித்தார். ஒருமுறை பல படங்களில் துணை நடிகராக நடித்த ஒருவிரல் கிருஷ்ணாராவ், குடும்ப வறுமை காரணமாக எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு போன் செய்திருக்கிறார். அப்போது எம்ஜிஆரே அந்த போனை எடுத்திருக்கிறார்.

போனை எடுத்தவர் எம்ஜிஆர் என தெரியாமல் பேசிய துணை நடிகர் கிருஷ்ணாராவ், நான் எம்ஜிஆரை நேரில் சந்திக்க முடியுமா, மிகவும் வறுமையில் இருக்கிறேன். பட வாய்ப்பே இல்லை. குடும்பம் பட்டினியாக உள்ளது. அவரிடம் உதவி கேட்க நேரில் வரலாமா என கேட்டிருக்கிறார். நான்தான் எம்ஜிஆர் என அவரிடம் சொல்லாமல், நாளை காலை 10 மணிக்கு ராமாபுரம் தோட்டத்துக்கு வாங்க என்று மட்டும் கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.

மறுநாள் ராமாபுரம் தோட்டத்துக்கு நேரில் வந்த அவருக்கு, அங்கிருந்த உதவியாளர் எம்ஜிஆர் கொடுக்க சொன்னதாக ஒரு கவரை கொடுத்திருக்கிறார். அப்போது அந்த கவரில் 2 ஆயிரம் ரூபாய் தொகை இருந்துள்ளது. அந்த காலத்தில் 100 ரூபாயே 10000 ரூபாயாக மதிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரம் ரூபாயை அந்த துணை நடிகருக்கு வழங்கி இருக்கிறார் எம்ஜிஆர்.

கவரை பிரித்த அவருக்கு சில நிமிடங்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்திருக்கிறார். ஒரு விரல் கிருஷ்ணாராவ் என்று ஒருவர் வருவார். அவரிடம் இந்த கவரை கொடுத்துவிடுங்கள் என்று தனது உதவியாளரிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றுவிட்டார் எம்ஜிஆர். சக நடிகரின் மறைவுக்கு கூட நேரில் செல்லவும் இரங்கல் தெரிவித்து வருத்தம் பதவிடவும் மறுக்கும் இன்றைய ஹீரோக்களுக்கு மத்தியில் எம்ஜிஆர் போன்றவர்கள் இன்னும் புகழோடு மக்கள் மனங்களின் வாழ இதுபோன்ற உன்னதமாக செயல்களும் உயர்ந்த உள்ளமுமே காரணமாகிறது. அதனால்தான் அவரை பொன் மனச்செம்மல் என புகழ்கின்றனர்.

சற்று முன்