- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அந்த படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறாரா? தரமான சம்பவமா இருக்குதே…?...

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அந்த படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறாரா? தரமான சம்பவமா இருக்குதே…? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி கடந்த 11 ஆண்டுகளாக ஹீரோவாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் மன்மதன் வல்லவன் படங்களில் சிம்புவுடன் காமெடி கேரக்டரில் நடித்த சந்தானம் பிறகு முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் காமெடி செய்தார். இதில் பல படங்களில் சந்தானம் காமெடி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனது.

இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டில் நடிகர் சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் காமெடி கலந்த படங்களாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

- Advertisement -

பாரிஸ் ஜெயராஜ் குலுகுலு சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி ஏ ஒன் தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் அறை எண் 305ல் கடவுள் டிக்கிலோனா கண்ணா லட்டு தின்ன ஆசையா இனிமே இப்படித்தான் டகால்டி பிஸ்கோத் ஏஜன்ட் கண்ணாயிரம் என சந்தானம் நடித்த படங்கள் பலவும் பெரிய வரவேற்பை பெற்றன.

கடந்த 16ம் தேதி சந்தானம் நடிப்பில் டிடி ரிடர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. கடந்த 2023ம் ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற டி டி ரிடர்ன்ஸ் படத்தின் 2ம் பாகமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதே நாளில் வெளியான மாமன் படம் ரூ. 28 கோடி வசூலை கடந்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சுந்தர் சி இயக்கிய மதகத ராஜா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சந்தானத்தை, காமெடி ரோலில் நடிக்க ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஏனெனில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாமல் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதற்கேற்ப நடிகர் சிம்பு நடிகர் எஸ்டிஆர் 49 படத்தில் நடிகர் சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது லேட்டஸ்ட் தகவலாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யோகிபாபு இருந்தாலும் சந்தானம் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் சந்தானம் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே லிங்கா மற்றும் எந்திரன் படங்களில் ரஜினியுடன் சந்தானம் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்