- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா தேவா போல இல்லை… இன்றைய இசையமைப்பாளர் இசையில் சரியான கவனம் செலுத்துவதில்லை - இயக்குனர்...

இளையராஜா தேவா போல இல்லை… இன்றைய இசையமைப்பாளர் இசையில் சரியான கவனம் செலுத்துவதில்லை – இயக்குனர் கஸ்தூரி ராஜா நேரடி தாக்குதல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இவரது மகன்கள்தான் இயக்குனர் செல்வராகவன், நடிகர் தனுஷ். கஸ்தூரி இயக்கத்தில் வெளியான முதல் படம் என் ராசாவின் மனசிலே. அடுத்து தூது போ செல்லக்கிளியே கரிசக்காட்டு பூவே ஆத்தா உன் கோவிலிலே எட்டுப்பட்டி ராசா வீரத்தாலாட்டு நாட்டுப்புற பாட்டு சோலையம்மா தாய்மனசு கும்மிப்பாட்டு போன்ற பல படங்களை இயக்கி உள்ளார்.

எட்டுப்பட்டி ராசா படத்தில் வந்த பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலும் நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூவா தாரேன் தாய்மனசு படத்தில் வரும் தூதுவளைய அரைச்சு போன்ற பாடல்களை எழுதியவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. இளையராஜா இசையில் உருவான கஸ்தூரி ராஜா எழுதிய பாடல்களை குட் பேட் அக்லி படத்தின் பயன்படுத்தியதுதான் சமீபத்தில் கோலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா சேலத்துக்கு வந்தார். சாமக்கோடாங்கி என்ற புதிய படத்தை அவர் டைரக்ட் செய்வது குறித்து கஸ்தூரி ராஜா கூறியதாவது, சாமக் கோடாங்கி என்ற படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறேன். இந்த படத்துக்கான லொக்கேஷன் தேர்வு செய்யத் தான் சேலத்துக்கு வந்திருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த படத்தின் சூட்டிங் முடிந்துவிடும். கதை தான் இந்த படத்தின் கதாநாயகன்.

பஞ்சுமிட்டாய் சேலை கட்டி, ஒத்த ரூவா தாரேன் என நான் எழுதிய பாடல்கள் தான் இப்போது பிரச்னையில் இருக்கின்றன. புதிய இசையமைப்பாளர்கள் இளையராஜா தேவா போன்று இசையமைப்பதில்லை. இசையில் அவர்கள் முழு கவனம் செலுத்துவதில்லை. இதனால் பழைய பாடல்களை பயன்படுத்துகின்றனர்.

- Advertisement -

அனுமதி கேட்டுவிட்டு அந்த பாடல்களை பயன்படுத்தலாம். ஆனால் அப்படி யாரும் கேட்பதில்லை. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம். முன்பு போல் முதல் மரியாதை கிழக்குச்சீமையிலே போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் எல்லாம் இப்போது வருவதில்லை.

இப்போது வெளியாகும் படங்களில் எலக்ட்ரானிக் இசை தான் வருகிறது. மீண்டும் மீண்டும் இளையராஜா தேவா உள்ளிட்டோர் பெயர்களை தான் சொல்ல வேண்டி இருக்கிறது என்று கஸ்தூரி ராஜா வெளிப்படையாக கூறியிருக்கிறார். கஸ்தூரி ராஜா இயக்குனராக பாடல் ஆசிரியாக மட்டுமின்றி சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்