சூர்யா தற்போது தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகும் இதில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்ல அவருக்கு கருப்பசாமி வேடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல் த்ரிஷா, லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் ஆர் ஜே பாலாஜியும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இதற்கு மெட்டு போட்டு வருகிறார். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இப்படி சூர்யா பிஸியாக இருந்து கொண்டிருக்க அவரது தம்பி கார்த்தியும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து விட்டார். அனேகமாக இது தீபாவளிக்கு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக வா வாத்தியாரே என்னும் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இந்த திரைப்படம், நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. சத்யராஜ் ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எப்படியும் இந்த ஆண்டுக்குள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கைதி 2 மற்றும் டானாகாரன் இயக்குனர் தமிழ் இயக்கும் திரைப்படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார் கார்த்தி.
இந்த நிலையில் கைதி திரைப்படத்தை தயாரித்தவரும், தற்போது சூர்யாவின் 45வது திரைப்படத்தை எடுத்து வருபவருமான எஸ் ஆர் பிரபு தனது அடுத்த திரைப்படங்கள் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதில் சூர்யாவின் 45 வது திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரம்தான் சூட்டிங் மீதம் உள்ளது. ஒரு பண்டிகை நாளில் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
கைதி இரண்டாம் பாகத்திற்கான பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டன. டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, டானாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். அதற்கான பிரீ ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன என்று எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.





