தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் ராஜமௌலி பாகுபலி ஆர்ஆர்ஆர் போன்ற பிளாக் பஸ்டர் படங்களுக்கு பிறகு பான் இந்தியா டைரக்டராக மாறிவிட்டார். இப்போது மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.
இயக்குனர் ராஜமௌலி ஒரு பிரமாண்ட இயக்குனராக இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அவர் மகாபாரதம் கதையை ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி விட்டு அத்துடன் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 2027ம் ஆண்டில் மகாபாரதம் படம் துவங்கி 2030ம் ஆண்டில் படம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்பட்டது.
தமிழ் சினிமாவில் பாகுபலி என்ற வரலாற்று படத்தை மன்னர் கால கதைக்களத்தில் உருவான ஒரு படைப்பை 2 பாகங்களாக தந்து அபார வெற்றியை பெற்றவர் இயக்குனர் ராஜமெளலி. அதன்பிறகுதான் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக எடுக்க இயக்குனர் மணிரத்னம் துணிச்சலாக முன்வந்தார்.
இப்போது எந்த திரைக்கதையாக இருந்தாலும் அதை 2 பாகங்களாக தருவது என்ற இயக்குனர்களின் முக்கிய முடிவுக்கு காரணமே பாகுபலி படம் 2 பாகங்களாக வந்து பெற்ற பெரிய வெற்றிதான். அதன்பிறகுதான் பலரும் 2 பாக படங்களை உருவாக்கி வருகின்றனர். பழைய ஹிட் படங்களின் 2ம் பாகத்தையும் உருவாக்கி 2ம் பாக படங்களாக ரசிகர்களுக்கு தந்து வருகின்றனர்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அவரது படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் நடிகர் நடிகைகள் பலருண்டு. ஏதேனும் சில காட்சிகளில் வந்தால் கூட போதும், சம்பளம் கூட வேண்டாம் என்றும் கூறுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சியான் விக்ரம், இயக்குனர் ராஜமௌலியே நேரில் அழைத்தும் அவரது படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் விக்ரம் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது நான் இயக்கும் படத்தில் ஒரு கொடூரமான வில்லன் கேரக்டர் உள்ளது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ராஜமௌலி கேட்டிருக்கிறார். ஹீரோ என்றால் ஓகே வில்லன் என்றால் வேண்டாம். விருப்பமில்லை என்று விக்ரம் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த கேரக்டரில் மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். சலார் படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் அறிமுகமான கனா கண்டேன் படத்திலும் வில்லனாக தான் நடித்திருந்தார்.





