- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம் எதிரிகள் அல்ல… நண்பர்கள், இதை அரசியலாக்க வேண்டாம் - கர்நாடகா துணை முதல்வர் டிகே...

நாம் எதிரிகள் அல்ல… நண்பர்கள், இதை அரசியலாக்க வேண்டாம் – கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பேச்சு! – ஆனா கமலுக்கு 24 மணி நேரம் கெடு விதிச்சு இருக்காங்களே?

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சிம்பு திரிஷா அபிராமி நாசர் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தக்லைஃப் படத்தை சொந்தமாக தயாரித்திருக்கிறார். நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து தக்லைஃப் படத்தில் கமலும் மணிரத்னமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று பேசியதற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட விட மாட்டோம் என்று அந்த மாநிலத்தின் திரைப்பட வர்த்தக சபை தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை கன்னட அமைப்புகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆனால் நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். தவறாக பேசியிருந்தால்தான் நான் மன்னிப்பு கேட்பேன் என்று கமல்ஹாசன் உறுதியாக கூறிவிட்டார். மேலும் கர்நாடகா நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் உள்ள தடையை நீக்க வேண்டும். அந்த படத்தை வரும் 5ம் தேதி கர்நாடகாவில் திரையிட அனுமதி வழங்க வேண்டும். தக்லைஃப் படம் திரையிடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கமல் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் கூறியதாவது, கமல் பேசியதை அரசியல் ஆக்க வேண்டாம். தமிழ்நாடு கர்நாடகா அண்டை மாநிலங்கள். நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், வாழ வேண்டும். இங்குள்ள தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது. அங்கிருந்து பலர் கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். நாம் எதிரிகள் அல்ல நண்பர்கள் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை சங்கத் தலைவர் நரசிம்மலு கூறியிருப்பதாவது, நாளை துபாயில் இருந்து சென்னைக்கு கமல் வர இருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்பு குறைவு. என்றாலும் நாளை நண்பகல் 12:00 மணிக்குள் மன்னிப்பு கேட்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்காவிட்டால் தக்லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்