- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் டிரைலரில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஏன் இடம்பெறவில்லை தெரியுமா?... அதற்கான பதில் இதோ...

ஜெயிலர் டிரைலரில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா ஏன் இடம்பெறவில்லை தெரியுமா?… அதற்கான பதில் இதோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஒரே ஹாட் டாபிக் என்னவென்றால் அது ஜெயிலர் படத்தை பற்றிய தகவல்களாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு, ரஜினி படம் திரையரங்குகளில் வெளியாவதால், அவர் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமானரும் ஜெயிலரை பார்க்க ஆர்வமுடன் இருக்கின்றனர்.

இந்தப் படத்தில், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஜராஃப், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியாகிய, நு காவாலையா பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. பாடல்வரிகளுக்கு ஏற்ப தமன்னா அட்டகாசமாக நடனமாட, அதனால் ஈர்க்கப்பட்ட பலரும், தாங்களும் நடனமாடி வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தனர். இந்த ஒரு பாடலே ஜெயிலர் மீதான பேச்சை அதிகரிக்க செய்தது.

இதன்பிறகு, டைகர் கா ஹுக்கும் பாடல் வெளியானது. சூப்பர் சுப்புவின் வரிகளில் உருவான இந்தப் பாடலில், பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு உள்ளிட்ட வரிகள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பின. அதேசமயம் பாடல் ஜோராக அமைந்ததால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர். எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

நெல்சனுக்கே உண்டான டார்க் காமெடி இந்தப் படத்திலும் இருப்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல், ரஜினியின் தூள் பறக்கும் ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களுக்கு நிறைவை கொடுத்தன. ஆனால், ட்ரெய்லரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட பிரபலம் சிவராஜ் குமார் ஆகியோர் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக, மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை நெல்சன் வைத்துள்ளாராம். இதனை நேரடியாக, திரையரங்குகளில் ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், நெல்சன் இப்படி செய்திருக்கிறாராம். படத்தில் இருக்கும் சஸ்பென்சை தொடரவே ஜெயிலர் படக்குழு இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்