- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு சபதம் எடுத்த கௌதம் மேனன்... ஒருவேளை அவசரப்பட்டு இப்படி ஒரு...

துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு சபதம் எடுத்த கௌதம் மேனன்… ஒருவேளை அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். ராஜீவ் மேனன் உடன் உதவியாளராக இருந்த அவர், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் திரைப்படத்திலேயே காதல் ரசம் சொட்ட சொட்ட காவியத்தை வழங்கிய அவர், அங்கிருந்து சிறப்பான திரைப்படங்களை கொடுத்து உச்சகட்ட இயக்குனராக உயர்ந்தார்.

கோலிவுட்டில் சூர்யாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான இயக்குனராக கௌதம் மேனன் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை வைத்து காக்க காக்க என்னும் திரைப்படத்தைக் கொடுத்து மாஸ் காட்டினார். இது கௌதம் மேனனுக்கும் சூர்யாவிற்கும் மிக முக்கிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

பிறகு இவர்கள் கூட்டணியில் வாரணம் ஆயிரம் உருவானது. சூர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்தது என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து இருவரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இணைந்தார்கள். படம் சூட்டிங் செல்ல போகும்போது அந்த திரைப்படத்திலிருந்து திடீரென விலகினார் சூர்யா. அதற்கான காரணம் என்ன என்று அப்போது வெளியாகவில்லை.

பிறகு, விக்ரமை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கினார் கௌதம் மேனன். சொல்லப்போனால் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் செயல்பட்டார். சிம்ரன், விநாயகம், திவ்யதர்ஷினி உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஜான் என்னும் மிக ஸ்டைலான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த திரைப்படம் தற்போது வரை வெளியாகவே இல்லை. கிட்டத்தட்ட படம் ரெடியாகி ஏழு ஆண்டுகளுக்கு மேலாக முடங்கி கிடக்கிறது. கௌதம் மேனனும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டதால், இயக்கத்தை ஒரு ஓரமாக வைத்து விட்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படியான சூழலில் அவர் தற்போது துருவ நட்சத்திரத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகும் வரை அவர் எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டாராம். அதன்படி எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் தற்போது வரை கையெழுத்திடவில்லையாம். சில முன்னணி விநியோகஸ்தர்களுக்கு அவர் படத்தை காட்டியதாகவும் அது அவர்களுக்கு பிடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அனைத்து சிக்கலும் தீர்ந்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் துருவ நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்