- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா படக்குழுவிடம் இருந்து வெளியான முக்கிய தகவல்…. அப்பாடா என பெருமூச்சு விட்ட தியேட்டர் உரிமையாளர்கள்!

குபேரா படக்குழுவிடம் இருந்து வெளியான முக்கிய தகவல்…. அப்பாடா என பெருமூச்சு விட்ட தியேட்டர் உரிமையாளர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் ராயன். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அதன்பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.

தனுஷ் நாயகனாக நடித்து இயக்கிய ராயன் படம் போலவே தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. தனுஷின் அக்கா மகன் பவிஷ் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஆனால் படம் திருப்தியளிக்கவில்லை.

- Advertisement -

தொடர்ந்து இட்லி கடை படத்தை டைரக்ட் செய்த தனுஷ் தேரே இஸ்க் மெயின் என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 20ம் தேதி தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நாயகியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்த நிலையில் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என்பதும் தெரிய வந்தது.

- Advertisement -

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஏனெனில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் படம் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு பெரிய அயர்ச்சியை சலிப்பை அலுப்பை ஏற்படுத்தும். குடும்பத்துடன் வருபவர்கள் அவ்வளவு நேரம் குழந்தைகளை தியேட்டர்களுக்குள் வைத்து சமாளிக்க முடியாது. தவிர இரவு காட்சிகள் முடிந்து வீடுகளுக்கு திரும்ப அதிக நேரமாகி விடும்.

அத்துடன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிக மின்சார பயன்பாடு காரணமாக மின் கட்டண செலவு அதிகரிப்பு, 5 காட்சிகள் திரையிட முடியாத நிலை ஏற்படும் என்று படக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குபேரா படத்தின் நீளம் 3 மணி நேரம் 1 நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. குபேரா படத்தில் இருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்