- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை எல்லாம் நம்பலாமா, வேண்டாமா என்றுதான் தோன்றுகிறது - குபேரா படம் குறித்து காரசாரமாக விமர்சித்த...

இதை எல்லாம் நம்பலாமா, வேண்டாமா என்றுதான் தோன்றுகிறது – குபேரா படம் குறித்து காரசாரமாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்த குபேரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான குபேரா படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரன் கடலில் எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். அது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்தியாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எண்ணெய் கொடுக்கும். அதை வெளியே கொண்டு வர அரசாங்க அமைச்சருடன் டீல் பேசப்படுகிறது.

- Advertisement -

இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் கைமாறுகிறது. அதில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும் 50 ஆயிரம் கோடி வெள்ளை பணமாகவும் கைமாறுகிறது. இந்த பணத்தை கைமாற்றும் அதிகாரியாக முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜூனா இருக்கிறார். கருப்பு பணத்தை மாற்றும்போது பினாமிகளாக பிச்சைக்காரர்கள் வேண்டும் என நாகார்ஜூனா கூறுகிறார். அதன் பின்னர் திருப்பதியில் இருந்து மும்பைக்கு செல்லும் தனுஷ் குபேரனாக மாறினாரா இல்லையா என்பதுதான் குபேரா படத்தின் கதை.

தனுஷ் மிக சிறப்பாக நடித்துள்ளார். சிபிஐ அதிகாரியாக நாகார்ஜூனாகவும் சைலண்டாக சிறப்பாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரராக இருக்கும் தனுஷின் வங்கி கணக்கில் எப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது என்பதற்கு சேகர் கம்முலா, தனது திரைக்கதையில் சிறப்பாக உழைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் கடகடவென போய் விடுகிறது. கடலில் கிடைக்கும் எண்ணையை எப்படி அரசாங்கத்தை ஏமாற்றி கைபற்றுவது, கருப்பு பணத்தை எப்படி கைமாற்றுவது அதற்கு பிச்சைக்காரர்களை எப்படி பயன்படுத்துவது என முதல் பாதி படம் வேகமாக நகர்கிறது.

- Advertisement -

இதுபோன்ற படத்தை எல்லாம் இரண்டே கால் மணி நேரத்தில் முடிக்க வேண்டும். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கதை வளைந்து நெளிந்து எங்கெங்கோ போகிறது. படத்தின் 2ம் பாதி முழுவதும் தனுஷ் மட்டும் தான் உள்ளார். இதில் லாஜிக் என்று கேட்டால், அது குறித்து எதுவுமே கேட்கக்கூடாது இஷ்டம் இருந்தால் படம் பாரு, இல்லை என்றால் கிளம்பு என்பதை போல் தான் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இந்த படத்தில் இருக்கின்றன. கிளைமாக்ஸ்சில் வைத்திருந்த காட்சிகளை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இவை எல்லாத்தையும் மீறி படத்தில் ஒற்றை மனிதனாக தனுஷ் உள்ளார். படத்தில் ராஸ்மிகா மந்தனா கேரக்டர் ஒட்டவில்லை. சில காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமல் ஓடுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் எப்போ படம் முடியும் என்பதே கேள்வியாக உள்ளது. முதல் பாதியில் சிறப்பாக கொண்டு போன கதையை இரண்டாம் பாதியில் அதே சிறப்பான முறையில் முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கலாக படம் சிறப்பாக உள்ளது. தனுஷ் தான் படத்தின் மைய நாயகன். ஆனால் அவரை மீறி ஸ்கோர் செய்வது நாகார்ஜூனா தான் என்று செய்யாறு பாலு குபேரா படம் குறித்து விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்