- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் கர்ஜனை... வந்தாச்சு ஜனநாயகன் படத்தோட அப்டேட்... இணையத்தை நொறுக்க காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்...

முதல் கர்ஜனை… வந்தாச்சு ஜனநாயகன் படத்தோட அப்டேட்… இணையத்தை நொறுக்க காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தை நிறுவி இருக்கும் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே தனது இலக்கு என்று கூறி வருகிறார். தன்னுடன் கூட்டணியில் இணைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியிருக்கிறார் விஜய். மத்திய அரசையும் திமுக அரசையும் அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே வருகிறார்.

இப்படி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய் தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என சொல்லப்பட்டிருக்கிறது. கன்னட திரை உலகில் மிகப்பெரிய நிறுவனமான கேவிஎன் இதனை தயாரிக்கிறது. ஹெச் வினோத் இதனை இயக்குகிறார்.

- Advertisement -

படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இது போக மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அஜித் குமாரை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கி இருக்கும் வினோத், அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இணைய இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியானது.

அரசியல் சார்ந்த கதைக்களமாக இது எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் அறிவிப்பு வீடியோவிலும் கமல்ஹாசன் தீபந்தத்தை வைத்தபடி இருந்தார். இப்படியான சூழலில் தான், விஜயை இயக்கும் வாய்ப்பு வினோத்திற்கு கிடைத்தது. இதன் காரணமாகவே கமல் உடனான திரைப்படம் தள்ளிப் போனதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய் படத்தின் உடனான போஸ்டரிலும் அதே தீபந்தம் காணப்பட்டது.

- Advertisement -

இதனால் கமலுக்கான கதையைத்தான் விஜயை வைத்து வினோத் இயக்க இருப்பதாக பலரும் ஆருடம் தெரிவித்து வந்தனர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தாயாராக ரேவதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. படமும் சென்னையை அடுத்த பையனூர் படப்பிடிப்பு தளத்திலேயே எடுக்கப்பட்டது. அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் வெளியூரில் படப்பிடிப்பதை பெரும்பாலும் தவித்தார் வினோத்.

முக்கியமான காட்சிகளுக்கு மட்டும் கொடைக்கானலில் இரண்டு மூன்று நாட்கள் சூட்டிங் நடத்தினார்கள். இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படும் சூழலில், ஜனநாயகன் திரைப்படத்திற்கான அப்டேட், ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்