- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஆதி நடிகை லட்சுமி மேனன் நடித்த சப்தம் படம் - ஓடிடியில் வெளியிட தடை...

நடிகர் ஆதி நடிகை லட்சுமி மேனன் நடித்த சப்தம் படம் – ஓடிடியில் வெளியிட தடை விதித்த நீதிமன்றம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்யாணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். மிருகம் மரகத நாணயம் ஈரம் ரங்கஸ்தலம் யாகாவாராயினும் நா காக்க அரவான் என பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் அரவான் மிருகம் ஈரம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகை லட்சுமிமேனன் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக கும்கி சுந்தரபாண்டியன் ரெக்க கொம்பன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன. ஆனால் தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஆதியுடன் கதாநாயகியாக அவர் நடித்த படம்தான் சப்தம்.

- Advertisement -

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சப்தம். கடந்த பிப்ரவரி 28ம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம், மறுநாள் மார்ச் 1ம் தேதி பகல் காட்சி முதல் தான் வெளியானது. கடைசி நேரத்தில் பைனான்சியர் தரப்பில் ஏற்பட்ட சிக்கல்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை குறித்த சிக்கலும் இதற்கு முதலில் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த சிக்கல் தற்போது வரை சப்தம் படத்துக்கு நீடித்து வருகிறது. பைனான்சியருக்கு தர வேண்டிய தொகையை தராத காரணத்தால் நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் வழக்கு தொடர்ந்தார்கள். அது குறித்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு நீதிபதி தடை விதித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வந்து சேர வேண்டிய பாக்கி இன்னும் சில கோடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயாக சில தவணைகளில் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய தாமதம் காரணமாக சப்தம் படம் ஓடிடியில் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது.

தியேட்டர்களில் சப்தம் படம் ரிலீஸ் செய்யப்பட்ட போது படம் வெளியானது குறித்து படக்குழு தரப்பில் பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. இப்போது ஓடிடியில் இந்த படம் வெளியானால் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழு தரப்பில் எதிர்பார்த்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

- Advertisement -

சற்று முன்