- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சினிமாவில் நடிக்க காரணம் அந்த நடிகைதான்… அவர்தான் எனக்கு பெரிய தூண்டுதலாக இருந்தார் -...

நான் சினிமாவில் நடிக்க காரணம் அந்த நடிகைதான்… அவர்தான் எனக்கு பெரிய தூண்டுதலாக இருந்தார் – நடிகை நயன்தாரா ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில்தான் என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் இருவரில் ஒருவர் நடிகை நயன்தாரா. மற்ற ஒருவர் நடிகை திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா 2 தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தன் 2 பிள்ளைகள் உயிர் உலகம் ஆகியோருடன் நடிகை நயன்தாரா, பழனி மலை கோவில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா நடித்த படம் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி படத்தை அடுத்து அவரது நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான படம் டெஸ்ட். 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. டெஸ்ட் படத்தை ரிலீஸ் செய்த வகையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இப்போது தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா 157 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தெலுங்கு இயக்குனர் அனில்ரவிபுடி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். அதே போல் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் மீரா ஜாஸ்மின் பற்றிதான் எங்கும் பேச்சாக இருக்கும். அவரது உறவுக்கார பெண் ஒருவர் என்னுடைய வகுப்பில்தான் படித்தார். என்னுடன் கூடவே அமர்ந்து கொண்டு இருப்பார். எப்போது பார்த்தாலும் மீராஜாஸ்மின் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். பாடல் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தினசரி அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியை பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.

எனக்கும் அதையெல்லாம் கேட்கும் போது பிரமிப்பாகவே இருக்கும். நான் 2002ம் ஆண்டில் சினிமாவில் அடி எடுத்து வைத்த காலகட்டத்தில் மீரா ஜாஸ்மின் ரொம்பவே பிரபலமாகி விட்டார். அவர் பெயர் தினசரி என் காதுகளில் விழாத நாட்களே இல்லை. அந்த வகையில் எனக்குள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த மீரா ஜாஸ்மின் ஒரு காரணமாகவே இருந்தார் என்று நடிகை நயன்தாரா வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஆனால் மீரா ஜாஸ்மினை விட உச்சம் தொட்டவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்