- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹீரோ படம் போலவே எனக்கும் கதை சொல்லுங்க என்று என்னிடம் கேட்டார் - பிரபல...

அந்த ஹீரோ படம் போலவே எனக்கும் கதை சொல்லுங்க என்று என்னிடம் கேட்டார் – பிரபல நடிகர் குறித்த உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பாண்டிராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பசங்க என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படமே நல்ல கவனத்தை வரவேற்பை பெற்றது. இந்த படத்தில்தான் நடிகர் விமல் நாயகனாக அறிமுகமானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவர்களின் மனநிலை, ஈகோ பிரச்னைகளை மையப்படுத்தி இந்த படம் பாண்டிராஜ் உருவாக்கி இருந்தார்.

தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப் பிள்ளை இது நம்ம ஆளு மெரினா கேடிபில்லா கில்லாடி ரங்கா எதற்கும் துணிந்தவன் கதகளி பசங்க 2 வம்சம் என பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் எதற்கும் துணிந்தவன் படம் மட்டுமே சரியாக போகவில்லை.

- Advertisement -

இயக்குனர் பாண்டிராஜன் கைராசியான இயக்குனர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில்தான் மெரினா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பசங்க படத்தில் நடிகர் விமலும் வம்சம் படத்தில் நடிகர் அருள்நிதியும் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி புதிய முகங்களை தன் படத்தில் அறிமுகப்படுத்தி அந்த படங்களை வெற்றிப் படங்களாக பாண்டிராஜ் தந்திருக்கிறார்.

அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி என்ற படம் வருகிற 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆகாசவீரன் என்ற கேரக்டரில் பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜன் பேசியதாவது, குடும்ப படம் என்றாலே சீரியல் கிரிஞ் என்று சொல்லிவிடுவார்கள். கொஞ்சம் விட்டால் அது சீரியலாக மாறிவிடும்.

- Advertisement -

அது உண்மைதான் .ரொம்ப சவாலானது ஒரு குடும்பப்படம் எடுப்பதுதான். ரொம்ப கஷ்டம். தற்போது லப்பர் பந்து குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் போன்ற குடும்ப படங்களை மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். என்னை அணுகும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எல்லோருமே குடும்ப கதைகளை தான் எதிர்பார்க்கிறார்கள். நிராகரிப்பது இல்லை.

கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் ஓடினவுடன், சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படம் எனக்கு பண்ணுங்கள் என்று கேட்டார். அப்படி வந்ததுதான் நம்ம வீட்டு பிள்ளை. இப்போது தலைவன் தலைவி படம் ஓடியது என்றால் ஹீரோக்கள் இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்பார்கள். தலைவன் தலைவி எல்லோருக்குமான படமாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்